பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 9 | மற்றவர்கள் எல்லோரும் லோ - லோ - லோ' என்று கேலியாக வாயினால் குலவையிட்டார்கள். சங்கு வைத்திருந்தவன் உற்சாகமாக ஊதி முழங்கினான். கும்பல் அங்கிருந்து நகர்ந்து சென்றது. பால்வண்ணம் பிள்ளை அதே இடத்தில் அமர்ந்தவர்தான். ஆடவில்லை. அசையவில்லை. அது நிகழ்ந்தது பிற்பகல் மூன்று மணி, அவருக்கு கால உணர்வும் இல்லை, காரிய உணர்வும் இல்லை. பால்வண்ணம் பிள்ளைக்கு பிள்ளை குட்டி கிடையாது. அவர் மனைவி இறந்து பல வருஷங்கள் ஆகியிருந்தன. அவர் தனி நபராகத்தான் வாழ்க்கை நடத்தினார். வயசும் ஐம்பதைத் தாண்டிவிட்டது. எனினும் “கல்லுப்போல்' இருந்தார். அவர் சிறு வயதில் ரொம்பவும் கஷ்டப்பட்டவர். வறுமை அவரை வாட்டி வதைத்தது. அந்நாட்களில் அவருக்குக் காலணாவைக் காண்பதே பெரும் பாடாக இருத்தது. எத்தனையோ நாட்கள் பட்டினி கிடக்க நேரிட் டதுண்டு. இதனால் எல்லாம் காசாசை பூதமாய் வளர்ந்தது. ஏதேதோ வேலைகள் பார்த்து சிறிதுசிறிதாகப் பணம் சேர்த்து சொந்தமாக ஒரு கடை வைத்து சம்பாதிக்கத் தொடங்கினார்; சம்பாதிக்க வேண்டும். நிறைய நிறையப் பணம் பண்ண வேணும். சொத்து சேர்க்கணும் - இதுவே அவருடைய இதயத் துடிப்பாய், மூச்சுக் காற்றாய், வாழ்க்கை லட்சியமாய் அவரை இயக்கியது. பணத்தை வட்டிக்குவிட்டு வசூலித்து மேலும் கடன்கொடுத்து வாங்குவதன் மூலம் எளிதில் பணம் சேர்த்து விடலாம் என்ற வித்தையைக் அவர் கற்றுக் கொண்டார். ஒரு ஆவேசத்துடன் அதில் ஈடுபட்டார்.