பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#39 வல்லிக்கண்ணன் கதைகள் சிறுமி அவரைப் பார்த்தாள். அவளது ஒளி நிறைந்த கண்கள் மேலும் சுடரிட்டன. அவள் சிநேகமாகச் கிரித் தாள். இளம் வெயில் போல் அழகாக இருந்தது அவள் சிரிப்பு. இது வித்தியாசமான குழந்தை என்று அவர் மனம் சொன்னது. புதியவர்களைப் பார்த்து கூச்சப்படுகிற குழந்தைகள், வெட்கப்படுகிற குழந்தைகள், அநாவசிய மாக பயப்படுகிற குழந்தைகள், அழுகிற குழந்தைகள்இப்படி குழந்தைகள் பலவிதம். பயமோ கூச்சமோ கொன் னாது சிநேகமாகச் சிரிக்கிற குழந்தைகள் அபூர்வமாகத் தான் தென்படுகின்றன. இவளும் ஒரு அபூர்வப் பிறவி என்று சுந்தரம் எண்ணினார். சுற்று முற்றும் பார்த்தார். பெரியவர்கள் யாரையும் காணவில்லை. காரில் அல்லது வேறு ரக வாகனங்களில் மேட்டு நில வட்டாரத்துக்கு காற்று வாங்க வருகிற பெரியவர்கள் எப்பவாவது தங்களோடு குழந்தைகளையும் கூட்டி வருவது உண்டு. அவர்கள் பிள்ளைகளை தாரான மாக வெளியே விளையாட அனுமதிக்க மாட்டார்கள். இப்படி தன்னந் தனியாக ரொம்ப நேரம் விளையாட விடுவதுமில்லை. இவள் யாருடன் வந்திருப்பாள் என்று சுந்தரம் சத் தேகப்பட்டார். அச் சிறுமியிடம் கேட்டார் 'உன்கூட யார் வந்திருக்கா? "யாரும் வரலே. நானாத்தான் வந்திருக்கேன்' என்று தயங்காமல் கூறினாள் அவள். "உனக்கு பயமாக இல்லே?"