பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 வல்லிக்கண்ணன் கதைகள் உள்ளுர் விஷயம் அறிந்த வட்டாரத்து அண்ணாச்சி ஒருவர் ஊகித்துச் சொன்னார். அதுவே சரியான காரணமாகவும் இருக்கலாம். எதைப் பற்றியும் தாராள அபிப்பிராயங்களை முந்திரிக் கொட்டைத் தனமாகக் கொட்டி வந்ததனாலும், மற்றவர் கருத்துக்களை தூக்கி எறிந்து பேசியதாலும், எந்தச் சிக்கலுக்கும் தீர்வுக்கான வழிவகுத்துக் காட்ட முன் வந்த தாலும், மற்றவர்கள் முதலில் கிண்டலாக, பெரியவாள் என்ன சொல்லுதாக?' 'பெரியவாள் அபிப்பிராயம் என்ன வாம்?’ என்ற தன்மையில் பேசினார்கள். பெரிசு என்ன சொல்லுது?’ பெரியவர் ஏதாவது ஐடியா வச்சிருப்பாரோ!' என்று எடக்காகக் கூறியிருப்பார்கள். பெரியவாள் ஒரு வழி சொல்லட்டும்’ என்று கோரினார்கள். இதனால் எல்லாம் பெரியவர், அண்ணாச்சியாபிள்ளை, பெரியபிள்ளை என்று குறிக்கப்பட்டு, சின்னையாபிள்ள்ை நிரந்தரமாக அந்த ஊரின் பெரியபிள்ளை’ ஆகிங் போனார். பெரியவர்களும் சின்னவர்களும், ஆண்களும் பெண்களும், சகல தரத்தினரும் அவரை பெரியபிள்ளை' என்றே கூறினார்கள். ஊரில் வயது முதிர்ந்தவர்கள், சின்னய்யாவா? அவனை லேசுப்பட்டி ஆளுன்னு எண்ணிப் போடாதே. பெரிய பெரிய வேலைகள் எல்லாம் செஞ்சுபோட்டு, இப்ப இப்படி இருக்கானாக்கும். பெரிய ஆசாமிதான் அவன். ஆயிரத்தை அரையே மாகாணி ஆக்கிவிட்டு, இப்போ பண் டாரம் கணக்கா இருக்கான்’ என்று சொல்வார்கள். சின்னையாப் பிள்ளைக்கு ஒரு காலத்தில், தாத்தாவும் அப்பாவும் விட்டுச் சென்ற சொத்து நிறையவே இருந்தது. வீடு வாசல், வயல், தோப்பு துரவு, வில்வண்டி, விலை