பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

「避55 வல்லிக்கண்ணன் கதைகள் வரவர அவர் விசித்திரமான எண்ணங்களை வெளியிடு வதாக மற்றவர்கள் கருதலானார்கள். -பாபநாசம் மலைமீது ஏறி, மேலே மேலே போய், தாமிரவர்ணி நதி பிறக்கிற இடத்தைக் காணவேண்டும். அங்கேயிருந்து புறப்பட்டு ஆற்றின் ஒரமாகவே நடந்துவந்து, அது போய் கடலில் கலக்கிற சங்கம் இடம் வரை போய் தரிசிக்க வேண்டும். -பொதிகை மலை மீது, எங்கோ ஒரு இடத்தில் அகத் தியர் இருந்து தவம் செய்ததாக சொல்கிறார்கள். இப்ப கூட அவர் இருப்பதாகப் பேசப்படுகிறது. அந்த இடத்தில் புதன் புதராகச் செடி கொடிகள் மண்டிக் கிடப்பதாகவும், கடந்து என்கிற விஷவண்டுகள் மொய்ப்பதாகவும் சொன்னார்கள். அது எவ்வளவு தூரம் நிசம் என்பதைக் கண்டறிய வேண்டும். யாராவது என் கூட வரத் தயாரா என்று கேட்பதை வழக்க மாக்கினார் அவர். எவரும் தயாராக இல்லை. மீண்டும் ஒருநாள் பெரியபிள்ளை என்கிற சின்னயாப் பிள்ளை சிவபுரத்தில் இருந்து மறைந்து போனார். மாதக் கணக்கில் அவர் தலைகாட்டவேயில்லை. 'பெரிசு பொதிகை மலையில் ஆராய்ச்சி நடத்திக் கொண் டிருக்கும்!” என்று சிலர் நக்கலாகப் பேசினார்கள். 'அகஸ்தியர் இடத்துக்கே போய் கடந்து கொட்டி செத்து போயிருப்பார் பெரியவர் என்று சில பேர் அபிப்பிராயப்பட் டார்கள். “தாமிரவர்ணியின் மூலத்தைக் காணப் போய் அவரே எங்காவது சறுக்கி விழுந்து ஐயோன்னு போயிருப்பார் என் நூம் சிலர் சொன்னார்கள்.