பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 வல்லிக்கண்ணன் கதைகள் இப்படி நினைத்த போதே சுயம்புவின் மனசு குளுகுளுத் தது. பஸ்சுக்காகக் காத்து நின்ற அலுப்பு கூடப் பெரிசாகத் தோன்றவில்லை. -டவுணிலிருந்து அஞ்சு மைல் தள்ளியிருக்கிறது. அந்த ஊர். டவுண் பஸ்’ அடிக்கடி போகும். அமைதி யான ஊர். வசதியான வீடு... நண்பர் வகுளபூஷணம் தன் ஊரைப்பற்றி ஒருமுறை சொல்லியிருந்தது, சுயம்புவின் நினைவில் மின்னலிட்டது. 'வகுளம் கொடுத்து வைத்தவர் சுகவாசி. பிக்கல் பிடுங்கல்கள் கிடையாது. அதனால் அவர் மனம் போல் அமைதியாக ஆனந்தமாக நாளேட்ட முடிகிறது என்று சுயம்பு எண்ணிக் கொண்டான். . நம்ம ஊருக்கு ஒரு தடவை வாருமேன்! இரண்டு மூன்று நாட்கள் தங்கும்படியாக வந்து சேரும். ஊருக்குப் பக்கத் திலே ஆறு ஓடுகிறது. அழகான சூழ்நிலை, வந்து, பார்த்து, ரசித்து, மகிழ்ச்சி அனுபவம் பெறலாமே! வகுளபூஷணம் ஒரு கடிதத்தில் இப்படி எழுதியிருந்தார். பிறகும் அவ்வப்போது அழைப்பு விடுத்து எழுதினார். நேரில் சந்தித்த போதும் சொன்னார். சுயம்புலிங்கத்துக்கு இது வரை நேரமும் எப்பொழுதும் வாய்ப்பாகவில்லை. இப்போது தான் சமயம் கிட்டியது. அந்த நகரத்துக்கு ஒரு முக்கிய வேலையாக வர நேர்ந்த போது, அப்படியே சிவபுரம் சென்று வகுளபூஷணத் தைப் பார்த்து, இரவில் அங்கே தங்கியிருந்து பேசிப் பொழு தைப் பொன்னாக்கலாமே என்ற ஆசை அவனுக்கு உண்டா யிற்று. அதிகாலையில் வகுளபூஷணத்துடன் எழுந்து ஆற்றுக்குப் போய் ஜில்லென்று நீராடி, சூழ்நிலை இனி மையை ரசிக்கலாம்.