பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘79 வல்லிக்கண்ணன் கதைகள் என்று சொல்லி விரட்டி அடிச்சால், அவனுக்குப் புத்தி வரும். அம்மாக்காரிதான் ஏ ராசா, நீ சரியாச் சாப்பிட மாட்டேன் கிறயே! இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்று மூணு வேளை யும் மூக்க முட்டச் சாப்பிடும்படி ஊட்டுகிறாளே! போதும் போதாததுக்கு சாயங்காலக் காப்பி, வடை, உளுத்தங்களி, அடை என்று செய்து கொடுக்கிறா. பின்னே ஏன் அவன் வேலைக்குப் போகப் போறான்! இப்படி எவளாவது ஒரு பெரியம்மா நீட்டி முழக்குவாள். ‘ஏதாவது ஒரு சவுளிக்கடையிலே, அல்லது பலசரக்கு மளிகைக் கடையிலே வேலைக்குச் சேர்ந்தால் என்ன? அச்சா பீசிலேகூட வேலைக்குச் சேர்ந்து தொழில் பழகி முன்னேற லாம்’ என்று சில பெரியவர்கள் பாண்டியனிடம் அவ்வப் போது சொன்னது உண்டு. அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது’ என்று அவன் உறுதியாகத் தெரிவித்துவிட்டான். இதனால் எல்லாம், உதவாக்கரை... வளையாவெட்டி... உருப்படாத பயல்’ என்ற பட்டங்கள் அவனுக்குக் கிடைத் துக் கொண்டிருந்தன. குளத்தில் நீர் பெருகி, அலையடித்துக் கொண்டிருக்கிற மாதங்களில் பாண்டிக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் பெரும் உற்சாகம்தான். கரை ஓரத்து கற்கள் மீது ஏறி நின்று, தொப்தொப்பென்று தண்ணிரில் குதிப்பார்கள். நீச்ச லடித்து மகிழ்வார்கள். தண்ணிருக்குள் மூழ்கி ஒருவரை ஒரு வர் துரத்திப் பிடித்து விளையாடுவார்கள். அவர்களுடைய பொழுதுபோக்கு மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். "இதென்னடா சனியன்கள் மாதிரி. குளத்திலே அமைதியாய் குளிக்க விடமாட்டேன்கிறாங்களே: என்று பலரும் அலுத்துக் கொள்வார்கள். *