பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 18O பிறருடைய ஏசல்கள் பற்றி பாண்டியோ அவனுடைய சகாக்களோ கவலைப்படுவதில்லை. சில சமயம் நீருக்குள் ளாக வந்து, குளித்து நிற்பவர்களின் கால்களில் கிள்ளிவிட்டு அப்பால் செல்வார்கள். பிறகு மேலே வந்து, எழவு மீனுக என்னமாக் கடிக்குதுங்க!' என்று சொல்லிச் சிரிப்பார்கள். "நீ பொட்டுப் பொடுக்குனு போக! உன்னை பாம்பு கடிக்க என்று பொம்பிளைகள் ஏசுவார்கள். "எவ்வளவு திட்டினாலும் உறைக்க மாட்டேன்குதே மூதேவிகளுக்கு என்று ஒருத்தி ஒரு தடவை சொன்னாள். 'திட்டுங்க திட்டுங்க, நல்லாத் திட்டுங்க! ஆயிரம் திட்டுக வாங்கினால் ஒரு ஆனைப் பலம் என்று கூறிச் சிரித்தான் பாண்டியன், ஆற்றில் வெள்ளம் பெருகிப் போகிற சமயம் பாண்டி யனை கை கொண்டு பிடிக்க முடியாது. குதிப்பும் கும்மாளி யும்தான் அவனுக்கு, வெள்ளப் பெருக்கில் ஆர்வத்தோடு நீந்திக் களிப்பான். அக்கரைக்கும் இக்கரைக்கும் போய்வருவான். மண்டபத்தின் மீது ஏறி நின்று, பாட்டுப் பாடியபடி, ஒடும் தண்ணீரில் குதிப்பான். குதித்தவன் நீரோடு போய் விட்டானோ என்ற அச்சம் கரை மேல் நிற்பவர்களுக்கு உண்டாகும். பல நிமிடங்கள் பாண்டி மேலெழுந்து வரமாட்டான். "ஐயோ, அநியாயமா ஆத்தோடு போயிட்டானே வீணப்பய!’ என்று யாராவது பதட்டத்துடன் கூறுவார்கள். பாண்டி சற்று தள்ளி தண்ணீருக்குள்ளிருந்து மொட்டுப் போலே தலையை வெளியே நீட்டுவான். முடியை சிலிர்த்துக் கொண்டு நீந்தி வருவான்.