பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் Զ00 சும்மா ஒருமுறை பார்த்து விட்டு வரலாம் என்ற ஏக் கத்தை வளர்த்துக் காலம் கழித்தார். இப்படியே விட்டு வைத்தால், முப்பது வருடங்களுக்கும் மேலாகவே காலம் ஒடி மறைந்துவிட்டது போலவே எஞ்சி யிருக்கிற பொழுதும் பறந்து போகும்; தனது அந்தரங்க ஆசையை நிறைவேற்றிக் கொள்ளாமலே தான் செத்துப் போக நேரலாம் என்ற அச்சமும் அவருக்கு உண்டாயிற்று. சிறுகுளம் என்ற ஊர் மனமோகன சொர்க்கபுரியாய் மங்கி நின்று அவரை வா வா என்று அழைத்தது. அதுவே பித் ாய், பேயாய் பிடித்து ஆட்டியது. . இனியும் தள்ளிப்போட்டு வந்தால் மனநிம்மதி கலைந்து பைத்தியமே பிடித்துவிடும் என்று அவருக்குப்பட்டது. அதை தவிர்ப்பதற்காக, ஏதேதோ சாமர்த்தியங்கள் பண்ணி, பொருளாதாரத்தில் ஒரு வழி ஏற்படுத்தி, ஒரு நாள் பூவு லிங்கம் பயணத்தை மேற்கொண்டார். பயணம் முழுவதிலும் அவருக்கு இருந்த பரபரப்பும் உணர்வுக் கிளர்ச்சியும் அளவிட முடியாதவை. நாகரிக நகரத்தின் மகத்தான காட்சிகளும், நகரவாசிகளின் கவலை யில்லாத் தோற்றமும், பகட்டும், பணப்புழக்கமும் அவருக்கு அவருடைய சிற்றுரையும், அங்குள்ள மக்களையும் கிட்டத் தட்ட அதே ரகங்களும் தரங்களும் கொண்ட நிலைகளில் சித்திரம் திட்டத் தூண்டுகோல்களாய் விளங்கின. நீண்ட தூரம் பயணம் செய்து, அவரது ஊருக்கு அருகில் உள்ள முக்கிய ஜங்ஷனில் ரயிலை விட்டு இறங்கிய பூவு லிங்கம், பட்டணத்தின் ஒரு குட்டிப் பகுதியைப் பார்ப்பது போலவே உணர்ந்தார். கும்பலும் நெருக்கடியும், அர்த்த மற்ற பரபரப்பும், பஸ்களும், போக்குவரத்து நெரிசலும் இந்தவிதமான பிரமையை அவருக்குத் தந்தன.