பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝 O 1 வல்லிக்கண்ணன் கதைகள் எப்படியோ பஸ் பிடித்து, மீண்டும் ஒரு சிறு பயணம் செய்து, சிறுகுளம் என்ற அவரது லட்சிய ஊரை எட்டிப் பிடித்தார் பூவுலிங்கம். பயணத்தின்போது வழியில் தென்பட்ட சிறுசிறு ஊர் களில் தென்பட்ட வறட்சியும், வறுமையின் சின்னங்களும், மனித உருவங்களின் சோகத் தோற்றங்களும் அவர் பார் வையை உறுத்தின. இருப்பினும், தனது தினைப்பிலும் கனவிலும் கண்டு மகிழ்ந்த சிறுகுளம் இனிமைகள் நிறைந்த குளுகுளு ஊராகவே இருக்கும் என்றுதான் அவர் மனம் நினைத்தது. பஸ்ஸை விட்டு இறங்கியதுமே, அவரது மனச் சித்திரத் தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டது. அவர் தெருத் தெருவாக நடக்கத் தொடங்கியதும், அவருடைய உள்ளத்தில் தித்திய செளந்தர்யத்தோடு நிலைபெற்றிருந்த இளம் பருவச் சூழ் நிலை பற்றிய ரம்மியமான சித்திரம் தகர்ந்தது; உருக் குலைந்து விழுந்து, சிதறிச் சின்னாபின்னமாகி மக்கியது. பூவுலிங்கத்தின் உள்ளத்தில் சிரஞ்சீவித் தன்மையோடு, இனிய எழிலோடு, பசுமையாய், வளமாய் கொலுவிருந்த சிறுகுளத்துக்கும், கண்முன்னே காட்சி தந்த ஊருக்கும் எவ் வளவு வித்தியாசம்! தெருக்கள் குறுகலாய், புழுதிமயமாய், அழுக்கும் அசிங்க முமாகக் கண்களை உறுத்தின. ஒவ்வொரு தெருவிலும் சில வீடுகள் இடிந்து விழுந்து கட்டை மண்ணாய் காட்சி தந்தன. வீடு என்ற பெயரில் நின்ற குடிசைகள் கூட அநே கம் இதோ, விழுந்து விடுவோம் என்பது போல உயிரைப் பிடித்தபடி நிற்பதாய் தோன்றின. பல வீடுகளில், ஆட்கள் பிழைப்புக்கு வழிதேடி நகரங்களுக்குப் போய் விட்டதால்,