பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 204 சித்திரம் சிதைந்து விட்ட நஷ்டம் வேறு! என்று அவர் எண்ணினார். - சிறுகுளத்தின் நிகழ்கால நிலையை நேரில் பார்க்காமல் இருந்தாலாவது, மனம் பழைய அடிப்படையை வைத்து இனிய வேலைப்பாடுகள் செய்து கொண்டிருக்குமே! இப்போது தனது கனவை, கற்பனையை, தானே கொன்று விட்ட வருத்தம் அவருக்கு உண்டாயிற்று. உடனடியாகத் திரும்பும் பயணத்தை தொடங்கிவிட்டார் பூவுலிங்கம். இப்போது அவர் உள்ளத்தில் தவிப்பும் ஆசைப் படபடப்பும் இல்லை. தனக்கு மிக நெருங்கிய ஒருவரை - அல்லது ஒன்றை - பறிகொடுத்து விட்டு, ஆற்ற முடியா துயருடன் திரும்புகிற ஒரு மனிதனின் வேதனைச் சுமைதான் அவர் உள்ளத்தில் படிந்திந்தது. - [] "இந்தியா டுடே - மே-ஜூன் 1991