பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தோஷங்கள் சந்தோஷங்கள் சுவரில் தொங்கிய காலண்டரைப் பார்த்தான் சின்னக் கண்ணன். ஆகா என்று கைகொட்டிக் களித்தான். ஈசிச்சேரில் ஓய்வாகச் சாய்ந்திருந்த அப்பா கேட்டார். “இப்ப என்ன சந்தோஷம்?’ என்று. 'நாளைக்குத் தேதி இருபது' என்றான் கண்ணன்.

w “சரி, அதுக்கென்ன ""நாளைக்கு ஒரு விசேஷம். ஞாபகம் இல்லையா?” “என்ன விசேஷம்?’’ "பம்பர் பரிசுச் சீட்டு குலுக்கல். முதல் பரிசு இரண்டு லட்சம். "ஆமா மறந்தே போனேன்' என்று நிமிர்ந்து உட்கார்ந் தார் தந்தை, “நாளைக்கு நமக்கு பரிசு கிடைக்கும். ஆமாதானே?” என்று ஆவலோடு கேட்டான் கண்ணன். அவனுக்கு வயது பத்து இருக்கும். "ஆமாம். பெரிய பரிசு கிடைக்கும்’ என்று அப்பா நம் பிக்கையோடு சென்னார்.