பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2O6 “பணம் வந்ததும் நாம எல்லாரும் திருப்பதிக்குப் போவோம். இல்லையா?* ஆமா, ரொம்ப காலமாகவே இது பாக்கி கிடக்கு. இந்தத் தடவை கண்டிப்பா போயிட வேண்டியதுதான்.” "அப்புறம் நமக்கு சொந்தமா ஒரு வீடு வாங்கிரு வோம்’

  • >

ஆமா... பெரிய வீடு. வசதியா, நிறைய ரூம்களோடு. மாடி யும் இருக்கும். என்ன அப்பா? : ஆமா, பங்களா மாதிரி வீடு. சுற்றி வர விசாலமான இடம். முன்னே அருமையா...' 'பூச்செடிகள் நிறைய இருக்கும். ரோஜா செடிகள் நிற்கும். இல்லையா அப்பா?” 'உம். ரோஜா செடிகள் இல்லாமலா? முதல்லேயே இல்லாவிட்டாலும், நாம வாங்கி நட்டு வைப்போம்.' 'சிவப்பு ரோஜா... ரெட் ரோஸ்... அதுதான் எனக்குப் பிடிக்கும். பிங்க் கலர் ரோஸ் செடிகளும் இருக்கட்டும். ஆனா, சிவப்பு ரோஜாதான் நிறைய வேணும். மஞ்சள் ரோஜாவும் நட்டு வைக்கலாம், செய்து போடுவோம்’ சுற்றிவர மரங்கள். என்னென்ன மரங்கள் அப்பா' 'மா, பலா, தென்னை, கமுகு, கொய்யா, எலுமிச்சை இப்படி எல்லா மரங்களும் தான்.”