பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$209 வல்லிககண்ணன் கதைகள் அனைத்தையும் மெளனமாகக் கேட்டபடி அடுப்படி வேலைகளில் ஈடுபட்டிருந்த அம்மா சிரித்துக் கொண்டாள். பையனின் சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப் போடும்படி யாக ஏதாவது சொல்வானேன் என்ற நினைப்பு அவளுக்கு. மறுநாள் பத்திரிகை வந்ததும், முதல் காரியமாக சின்னக் கண்ணன் அதிர்ஷ்டப் பரிசு முடிவுகளைத் தான் பார்த்தான். தங்கள் சீட்டையும் பத்திரிகையையும் உன்னிப் பாக நோக்கினான். என்ன கண்ணா, நம்பர் இருக்கா?” என்று அப்பா கேட்டார். 'இல்லே அப்பா. பத்து ரூபாய் பரிசு கூடக் கிடைக் கலே. கடைசி எண் எட்டு இருந்தால் நமக்கு பத்து ரூபா கிடைச்சிருக்கும். நம்ம சீட்டிலே கடைசி எண் ஆறு என்று இருக்கு.’’ 'போகுது போ. ஒவ்வொரு தடவையும் இது மாதிரி தான் ஆகுது. அதிர்ஷ்டம் கிட்டத்திலே வர்ற மாதிரி இருக்கு. ஆனா எட்டிப் போயிருது' என்றார் அப்பா. கண்ணன் தன் வேலைகளை கவனிக்கப் போனான். உரிய நேரத்தில் ஸ்கூலுக்குப் புறப்பட்டான். 'கண்ணா!' என அழைத்தார் அப்பா. 'முப்பதாம் தேதி குலுக்கல் ஒரு லாட்டரி இருக்குது அல்லவா?’’ என்னப்பா?’’

  • நீ வரும் போது அதிலே ஒரு சீட்டு வாங்கிட்டு வா. இந்தா ரூபா.'

வ.-14