பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 58 தோட்டத்துப் பக்கம் போனாள். செம்பருத்திச் செடியில் பூக்கள் நிறைந்திருந்தன. அந்தச் செம்மை அவள் கவனத் தைக் கவர்ந்தது. சில பூக்களைப் பறிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. முயற்சி செய்தாள். எட்டவில்லை. பெரு விரல்களை ஊன்றி நின்று, எம்பிப் பார்த்தாள், ஊகூங். அங்கே ஒரு கட்டை கிடந்தது அவள் பார்வையில் பட்டது. அதன் மீது ஏறி நின்று முன்னே வளைந்து, கையை நீட்டி, செடியைப் பிடித்து இழுத்தாள். - ஏட்டி, ஏட்டி, அங்கே என்ன செய்யுதே? கீழே விழுத் திரப் போறே” என்று பதட்டத்துடன் எச்சரித்தவாறு தாத்தா அங்கே வந்து சேர்ந்தார். 'பூப் பறிக்கேன்!' - பெருமை குமிழியிட்டது அவள் பதிலில், “இப்படி முன்னாலே வளைஞ்சா, கீழேதான் விழுவே மூக்கிலே அடிபடும்’ என்றார் அவர். கட்டை சரியாக் இல்லே. இது மகுடிச்சு நீ கீழே விழுந்திருவே!" அவள் வெற்றிகரமாக இரண்டு பூக்களைப் பறித்து விட் டாள். அந்தப் பெருமையிலும் மகிழ்விலும், மேலேயிருந்து "தொபுக்கடீர்’ என்று கீழே குதித்தாள்; சிரித்தாள். அவர் பயந்து விட்டார். "ஏட்டி, இப்படிக் குதிக்க லாமா? காலு கையி முறிஞ்சிதுன்னா?” என்றார். “எனக்குதான் அடிபடலியே!' என்று கூவியபடி, அவள் குதித்தாள், ஓடினாள். “ஏ வள்ளி எட்டி மெதுவாப்போ. மழை பெஞ்ச தரை; வழுக்கி விட்டிரும். கீழே விழுந்து முழங்காலைப் பேர்த்துக்