பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது கதைகள் தமிழில் சிறுகதை வளமும் வனப்பும் பெற்று விளங்கும் தனித்துறை ஆகும். தமிழ்ச் சிறுகதை 1920களிலிருந்து புது உயிர்ப்பும் புதிய வனப்பும் பெற்று வந்திருக்கிறது. கவி சுப்பிரமணிய பாரதியும், வ.வெ. சுப்பிரமணிய ஐயரும் சிறு கதையில் மறு மலர்ச்சியும் இலக்கிய மணமும் புகுத்தினார்கள். 1930களில் மணிக்கொடி எழுத்தாளர்கள்புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், ந. பிச்ச மூர்த்தி, மெளனி, ந. சிதம்பர சுப்ரமண்யன், சி.சு. செல்லப்பா, பெ. கோ. சுந்தரராஜன், பி. எஸ். ராமையா-சிறுகதைக்கு ஆழமும் கனமும் புது வனப்பும் புதிய வேகமும் சேர்த்தார்கள். அவர்களுக்குப் பின்னர் கதை எழுத ஆரம்பித்த வர்கள் மணிக்கொடி எழுத்தாளர்களின் பாதிப் பைப் பெறுவது தவிர்க்க இயலாதது ஆயிற்று. * மணிக்கொடி எழுத்தாளர்களின் பாதிப்பால்முக்கியமாகப் புதுமைப்பித்தன் எழுத்துக்களால் பாதிக்கப்பட்டு-கதை எழுதத் தொடங்கியவர்கள் கு. அழகிரிசாமி, தொ.மு. சி. ரகுநாதன், வல்லிக் கண்ணன் ஆகியோராவர். எங்கள் முன்னோடிகளின் தாக்கம் எங்களுக்கு இருந்தபோதிலும், கால ஓட்டத்தில் நாங்கள் அவரவருக்கெனத் தனி நோக்கும் தனிப்போக்கும் பெற்று, வெவ்வேறு வழிகளை அமைத்துக் கொண் டோம் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியதாகும். உலகத்துச் சிறுகதைகளில் எங்களுக்கு இருந்த ஈடு பாடும் இதற்குத் துணை புரிந்தது.