பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 6念 மைல் தூரத்தில் மூலைக்கரை இசக்கி அம்மன் கோவில் இருந்தது, மூர்க்கம்ான தெய்வம் என்று. அந்த வட்டாரத்தில் பிரசித்தம். ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு குள்த்தங்கர்ை மூலையில் அது இருந்தது. முன்னே நன்கு ஓங்கி அடர்ந்து புரத்து வளர்ந்த ஆலமரங்கள் இரண்டு நின்றன. பந்தல் அமைத்தது போல் தவிந்து நிற்கும் அம்மரங்களின் இ,ே பகல் நேரத்தில்கூட நிழல் இருண்டு கிடக்கும். இரவின் இருட்டில் அங்கு கருங்கும் என்றிருக்கும். பயங்கரமான தனிமை. சாதாரண ஜனங்கள் இரவு வேளையில் அந்த இடத்துக்குப் போக மாட்டார்கள். பயம்தான் காரணம். அங்கே போய், ஒரு ஆலமரத்தில் ஆணி அறைந்து வைத்து விட்டு வரவேண்டும்; ஆடி அமாவாசை இரவில் என்று ஒரு பந்தயம். ஐந்து ரூபாய் தரப்படும் என்று அறிவிப்பு. கைலாசம் துணிந்து செயல் புரிந்தான். ஆடி அமாவாசை நேரத்துக் கன்னங் கனிந்த கருக்கிருட்டும் ஒவ்ஒவ் என்று பெருங்கூச்சலிட்டவாறு சுழன்று வீசிய காற்றும், தனிமையும் அவனைக் கலவரப்படுத்தவில்லை, பயங்கரக் கதைகள் பல வற்றின் பிறப்பிடமாக வீற்றிருந்த மூலைக்கரை இசக்கியின் முன்னே நிதானமாக நின்று-ஒரு மரத்தில் மட்டுமல்லஇரண்டு மரங்களிலும் ஆணி அடித்துவிட்டு, அஹஹஹா என்று கணத்த குரல் எழுப்பி அட்டகாசமாய் சிரித்தான் அவன். பேய் அலறியது என்றும், நள்ளிருளில் இசக்கி கோரக் குரல் எழுப்பினாள் என்றும் பயந்து வெலவெலத்துப் போயிருப்பார்கள், யாராவது அதைச் செவிமடுத்திருந்தால்! இப்படி அவன் வாழ்க்கையில் எத்தனையோ விரப்பிர தாயங்கள்! ஓடுகிற பாம்பையும் மிதிக்கிற வயசு என்று இளமை குறித்துச் சொல்லப்படுவது, அவனுக்கு மிகுதியும் பொருத்தமாகவே இருந்தது. ۰۰ نام வேணுமென்றே பாம்பைப் பிடித்து ஒடவிட்டு காலால் ஓங்கி மிதித்துக் களிக்கும் இயல்பு பெற்றிருந்தான் அவன். .