பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

su593353 5ঠটা সোচী '68 அதிலிருத்து சிதறிய துண்டு துகள்கள் நெடுகத் தெறித்துக் கிடத்தன. அவன்மேலும் ஒரு சிறு துண்டுபட்டிருக்கக் கூடும். ஆழ்துயிலின்போது பயங்கர ஓசையுடன் தலை மாட்டின் மிக அருகே இருட்டில் பெரும் கட்டி விழுந்ததனால் துக்கம் கெட்ட அதிர்ச்சி: மேலே படீரென ஒரு சிறு கட்டி பட்டுத்தெறித்தது; பிறகு அந்த விபத்தின் பயங்கர்த்தை வெளிச்சத்தில் பார்த்தது; பார்த்தவர்களின் பேச்சு எல்லா மாய் சேர்த்து அவன் மனசை அதிரடித்து விட்டன. . 'அம்மா, என் பிள்ளை ஒரு ஆசை பிழைச்சசுது! அந்தக் கட்டி கொஞ்சம் விலகி அவன் தலைக்கு நேரே விழுந்திருந் தால் அவன் கதி என்னாகியிருக்கும்?' என்று துடித்து அவன் தாய் அவனைக் கட்டிப் பிடித்துக் கதறினாள். உடம்பில் எங்காவது அடிபடவில்லையே என்று அன்புடன் தடவிக் கொடுத்தாள். என்னமா வேர்த்துக் கொட்டுது' என்று சீலை முந்தியால் துடைத்து விட்டாள். மற்றவர்களும் அதையே தான் சொன்னார்கள். அவன் உள்ளத்திலும் அந்த எண்ணம் சிலிர்த்தது. அதனால் அவன் உடல் நடுங்கிக் கொடுத்தது. அன்று முதல் இருட்டும் இரவும் அவனை வெகுவாக பாதித்தன. துரங்கிக் கொண்டிருப்பான். திடீரென்று ஊமை அலற லாக அலறிக் கொண்டு விழித்தெழுவான். அவன் உடல் நடுங்கியவாறிருக்கும். அவன் பார்வை வெறும் வெளியில் குத்திட்டு நிற்கும். அம்மா பதறி எழுந்து, அவன் அருகில் வந்து, என்ன, என்னடா கண்ணா?’ என்று பரிவுடன் விசாரிப்பாள். நெற்றியில் கைவைத்துப் பார்ப்பாள். :முது கைத் தடவுவாள். ஒண்னுமில்லே: ஒண்ணுமில்ல்ையம்மா, நீ படுத்துக்கோ’ என்பான். அவனுக்குத் தெளிவாகப்