பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 வல்லிக்கண்ணன் கதைகள் "கன்றுக்குட்டி துள்ளி ஒடும், ரெண்டாம் கிளாசில் நான் படித்த பாடம். கண்ணன் தின்னும் பண்டம் வெண் ணெய். அண்ணன் என்று இங்கு வருவார்?...' பாடப் புத்தகத்தில் எந்தக் காலத்திலோ படித்ததை இப்போது பள்ளிப் பையனின் நீட்டல் ராகத்தோடு உச்சரித்த படி நடந்தான். - தெருவோடு போன ஒரு சிறுவன் வேடிக்கையாகப் பார்த்தான். சிரித்தான். கூச்சலிட்டான்

  • காசிக் போனார்

எங்கே போனார்? கடைக்குப் போனார். என்ன வாங்க? உ வாங்க என்ன டி? பொண்டாட்டீ!’ என்று 'டி'யில் விசேஷமான அழுத்தமும் நீட்டலும் சேர்த்து முழக்கினான். அவனை முதுகில் தட்டிக் கொடுக்க வேண்டும் என்று சுயம்புவுக்குத் தோன்றியது. டே இங்கே வாடா!' என்று கூப்பிட்டான், - பையனோ ஏ பீ ஸி டி - எங்கப்பன் தாடி ஒ பீ ஸி டிஒங்கப்பன் தாடி!' என்று கூவிக்கொண்டு ஓடிவிட்டான். -பிசாசுப்பயல் மகன்! Tobuu.ಮqirGr. உணர்ச்சிகள் உந்துகிறபடி வாழ்கிற பையன். -