பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வளர்ப்பு மகள்

"நீங்கல்லாம் பெரியவங்க... ஒற்றுமையாய் இருக்கணும். ஒரு தாய் மக்கள் மாதுரி பழகனும், ரமணன்! உங்களுக்கும் சிஸ்டர் இருக்கும்! அதே மாதிரி இந்த பாப்பாவையும் பார்க்கணும். மல்லிகா நீங்களும், அவர் தற்செயலாய் பார்க்கிறதையும் தப்பா நினைக்கப்படாது. கந்தசாமி இனிமேல் கைநீட்டுற வேலையை வச்சுக்காதே. நாங்கள் எதுக்கா இருக்கோம்? இனிமேல் இந்த மாதிரி ரகளை வந்தால், லாக்கப்பில் தள்ளிடுவேன்."

"எல்லோரையுந்தானே சார்" என்றாள் மல்லிகா.

ஆமாம்... எல்லோரையுந்தான்... யாராய் இருந்தாலும்... எங்களுக்கு ஒரே மாதிரிதான்"

சப்-இன்ஸ்பெக்டர். கீழே விழுந்தாலும் மண்படாத லத்திக் கம்பைத் தட்டிக்கொண்டே போலீஸ்காரர்களுடன் போய்விட்டார். எல்லோரும் மல்லிகாவைப் பெருமிதத்துடன் பார்த்தார்கள். என்னமாய்... இங்iசுல விளாசுகிறாள்... அடேயப்பா.

வீட்டுக்காரி, அடைகாக்கும் கோழி மாதிரி, வீட்டுக்குள் அடைந்து கொண்டாள். வெளியே தலைகாட்டவில்லை.

அதேசமயம், 'இட்லி' ஆயா பேசுவது, காதுக்குள் விழுகிறது.

"நீ நிசமாவே... ராசாத்தி குயந்தே... ராசாத்தி... நீ காட்டியும் இல்லாட்டா நம்ம கந்தசாமியை... போலீஸ்காரங்க... கந்தரு கோலமா ஆக்கியிருப்பாங்க... நீ... தியாகராய நகர்ல... பெரிய வீட்ல இருந்து இங்கே வந்தப்பபோ... ஆயா அழுதேன் குயந்தே... அழுதேன்... ஆனால் ஆண்டவனாப் பாத்துத்தான் ஒன்னை... அனுப்பி இருக்கார் குயந்தே... அனுப்பி இருக்கார்"

மாலையில் வீட்டுக்கு வந்ததும், விஷயத்தைக் கேள்விப்பட்ட பெருமாள் "எடுடி... கத்தியை" என்றார். பரமசிவம் பாயப் போனான். செல்லம்மா புருஷனையும், மல்லிகா தம்பியையும் பிடித்துக் கொண்டார்கள்.


2O

ஒரு வாரம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியது.

எதிரிகள் ஒட்டுமொத்தமாகச் சேரும்போது அவர்களில் மிகவும் ஏலாத ஏழை மீதுதான். அதிகமாகக் கோபம் வரும் என்பார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/112&oldid=1134181" இலிருந்து மீள்விக்கப்பட்டது