பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வளர்ப்பு மகள்

அரைமணிநேரத்திற்குள், வெளியே ஒரு கம்பியை நீட்டிக்கொண்டு. ஜீப் வந்தது. டெப்டி-கமிஷனர் இறங்கினார். போலீஸ்காரர்களின் சல்யூட்டுகள், அவரின் நடைக்குத் தாளமாக இருந்தது.

மல்லிகா, டெப்டிக்கு முன்னால் நின்றுகொண்டு "நீங்களே விசாரிங்க ஸார்... இதோ... இந்த ஆயாவைப் பாருங்க ஸார்... முப்பது வருஷமா... இந்த திண்ணையில.. கடைபோட்டு... வாழ்கிறவள். இந்தம்மா... ஆயாவை... கீழே இழுத்துப்போட முயற்சி செய்தபோது... இந்த ராக்கம்மா, ஆயா அடிபடாமல் இருக்க இந்த அம்மாவை தள்ளியிருக்காள்... இந்த அம்மா மேலே பட்ட காயம் தற்செயலானது... ஆயா மேலே பட்டது அடாவடித்தனமானது... ஆனால் ஒங்க போலீஸ்காரங்க... ஆயாவையும், ராக்கம்மாவையும் 'வேன்ல' ஏறச் சொல்றாங்க.. இந்த அம்மா ஏறக்கூடாதாம்... என்ன ஸார் நியாயம்? அதனாலதான் சொல்றோம்.. ஒண்ணு... எங்களையும் அந்தம்மாவையும் ஒன்றாய்க் கூட்டிக்கிட்டு போங்க... இல்லன்னா எங்கள மட்டும் கொன்னுட்டுப் போங்க... இதைத்தவிர ஏளைபாளைகளால என்ன செய்ய முடியும்... ஏழைகள் ஒற்றுமையாய் இருக்கக்கூடிய ஒரே விஷயம்... இந்த மாதிரியான அவல நிலையிலதான்..."

டெப்டி கமிஷனர், தன் பெல்ட்டைப் பிடித்துக்கொண்டே யோசித்தார். இரண்டு தரப்பையும், வேனில் ஏற்றாத போலீஸ்காரர்கள் மீது அவருக்குக் கோபம் வந்தது உண்மைதான். ஆனாலும், அந்த உண்மையை முகத்தில் கோரதாண்டவமாட விடவில்லை. அமைதியாகப் பேசினார்.

"நடந்தது நடந்துட்டு... இனிமேல் ஒற்றுமையாய் இருக்கதாய்... இரண்டு தரப்பும் எழுதிக் கொடுத்தால்... இத்தோடு விட்டுடுறோம். இல்லன்னா.." மல்லிகா பதிலளித்தாள்.

"ஸார்... எலியும், பூனையும் சண்டை போடுதுன்னு சொல்வது மாதிரி இது... ஏன்னா... சண்டையைத் துவக்குனது இந்த அம்மா.... அதனால அதை முடிக்கவேண்டியதும் அவங்கதான்... இருந்தாலும் பரவாயில்லை. பெரியவரான ஒங்க வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நாங்க தகராறை முதலில் துவக்கமாட்டோமுன்னு எழுதிக் கொடுக்கிறோம்... சந்திராக்கா... ஒரு பேப்பர் கொண்டு வா..."

மல்லிகா, சந்திரா கொடுத்த காகிதத்தில் மடமடவென்று எழுதினாள். எல்லோரும் கையெழுத்துப் போட்டார்கள் ஆயாவால்தான் முடியவில்லை.

குயந்தே... நீ சொல்லிக் கொடுத்த கையெழுத்து இதுக்கா பயன்படணும் குயந்தே..."

"இதுக்குத்தான் பயன்படணும்... படிச்சு பட்டம் பெற்ற பலர். தங்கள் கையெழுத்தை... எது எதுக்குல்லாமோ போடும்டோது. நீங்க உரிமையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/118&oldid=1134222" இலிருந்து மீள்விக்கப்பட்டது