பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

இந்திர மயம்

கத்துக்குறதுக்கு 5000 ரூபாய் கொடுங்க. இந்தப் பணத்திற்குப் பிறகு உங்ககிட்ட இருந்து ஜீவனாம்சம் கேட்கமாட்டேன்."

"எனக்கு வருகிற கோபத்திற்கு..."

"கணவனின் கோபத்தை தணிக்கிறது மனைவியோட கடமைதான். அதுக்காக ஒரே செல்வமான உடல் ஆரோக்கியத்தை அவளால காவுகொடுக்க முடியாது ஸார்."

கோபால் ஆள்காட்டி விரலால் தனது கன்னத்தை அடித்தபடி அவளையே வெறித்துப் பார்த்தான். அது, அவளை நிரடலாக்கியது. "என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை" என்பது மாதிரி அவனுடன் தோழமையாக பேசப்போனாள். அதற்காக கட்டிலில் இருந்துகூட எழப்போனாள்.

இதற்குள், அவன், அவள் மீது பாய்ந்தான். கட்டில் மெத்தையில் ஏறி நின்று அவள் மேல் தொபென்று விழுந்தான். "என்னடி நினைச்சுக்கிட்ட? சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை ஆண்பிள்ளைதான்" என்று வார்த்தைகளை சிதறடித்தான். அவளது இரண்டு கைகளையும் நீட்டி தனது கைமுட்டிகளால் அழுத்திக்கொண்டான். கால்களாலேயே அவளது ஆடைகளைக் களையப்போனான். இதனை சிறிதும் எதிர்பாராத அவள், அவனுள் சிக்கித் தவித்து "வேண்டாம் வேண்டாம்" என்று குரலிட்டாள். இந்தப் போராட்டத்தில், தான் தோல்வியுற்றால், ஒரு எய்ட்ஸ் நோயாளியாகி அல்லது சிலியிஸ் நோயில் மாட்டி, உடலெல்லாம் இந்திரமயமாகி தொழுநோயாளியைவிடக் கேவலமாக மாறவேண்டியது இருக்கும் என்ற எண்ணம் அந்த வேளையிலும் அவள் மனதில் உடனடியாய் உட்புகுந்தது. மேலே படர்ந்தவன் ஒரு எய்ட்ஸ் அரக்கன் போலவும், அவனே பூதாகரமான எய்ட்ஸ் கிருமியாகி தன்னை அழுத்துவதாகவும் தோன்றியது.

கோபால் முதுகை மேல்நோக்கி வளைத்தபோது அதில் கிடைத்த இடைவெளியில் அவள் கால்களால் அவன் மார்பை தள்ளிவிட்டாள். அவன் படுக்கையின் பின்பக்கம் மல்லாக்க சாய்ந்தபோது, அவள் கட்டிலில் இருந்து துள்ளிக்குதித்து தாழிட்ட கதவை அவசர அசரமாக விலக்கி மாடிப்படிகளில் கீழ் நோக்கி ஓடினாள்.

படியோரம் விக்கித்து நின்றவளைப் பார்த்து மாமியார் ஓடோடி வந்தாள். ஒரு நாவலை படித்துக்கொண்டிருந்த அனிதா அதிலிருந்து கண்களை நிமிர்த்திப் பார்த்தாள் அவள் தந்தை அருணாசலமே குடிபோதையில் ஆம்பள ஆம்பளதான். பொம்பள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/154&oldid=1134591" இலிருந்து மீள்விக்கப்பட்டது