பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு.சமுத்திரம்

73

கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்க, அவள் அண்ணன் ராமசாமி இன்னொரு பணக்காரத் தம்பியான சுப்பையாவோடு அங்கே வந்தார். முதலில் அத்தானுக்கு வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தார். அப்புறம்...

"மல்லிகா வந்து பார்த்தாளா?" என்றார்.

"அவள் என்ன எங்க பிள்ளையா, வர்றதுக்கு" என்றாள் பார்வதி.

"ஒருவேளை, என்க்கு சுகமில்லாதது அவளுக்குத் தெரிந்திருக்காது" என்றார் சொக்கலிங்கம்.

இப்போது ராமசாமியையே தோற்கடிப்பதுபோல் சுப்பையா எகிறினார்.

"தான் பெறணும் பிள்ள, தன்னோட பிறக்கணும் பிறவி என்கிற பழமொழி சும்மாவா? மல்லிகாவிற்கு தெரியாதுன்னு எங்களை நம்பச் சொல்றீங்களாக்கும். அவள் தம்பிகிட்ட மூணு நாளைக்கு முன்னால கடைப் பயல்கள் சொன்னாங்களாம். அவன் சொல்லாமலா இருப்பான்? உம் மகளாய் இருந்தால் வராமல் இருப்பாளா? போதாக்குறைக்கு, உம் தங்கச்சி புருஷன் உம்மை கோர்ட்டில நிறுத்தப் போறானாம்... கோர்ட்டுல நிக்கறதுக்கு உமக்குப் பலம் வரதுவரைக்கும் காத்திருக்கப் போகிறானாம். அப்புறம் வழக்காம். மல்லிகாவும் நோட்டீஸ் அனுப்பறதுக்கு கையெழுத்துப் போடுறேன்னு சொல்லிட்டாளாம்."

சொக்கலிங்கம் பேசவில்லை. பேச விரும்பவும் இல்லை. பெரிய மைத்துனர் ராமசாமி, முறையோடு பேசுபவர்போல் எல்லோரையும் முறைத்துக்கொண்டே பேசினார்.

"எதுக்குப்பா வீணா கத்துறே? இன்னைக்கே ஒரு முடிவுக்கு வந்துடனும் அத்தானுக்கு ஒரு லாபத்தைப் போல. நஷ்டம் வந்துட்டால், பெருமாள். பார்வதியை கோர்ட்டுக்கு இழுக்கத்தான் போறான். இப்போதே ஒரு முடிவுக்கு வரணும்."

"அத்தானுக்கு ஆயுசு நூறு. அப்படிச் சொல்லாதே" என்றார் சுப்பையா.

"நான் அந்த அர்த்தத்துல சொல்லலப்பா. பார்வதிக்கும் ஒரு துணை வேணும். ராமன் பயலை நம்ப முடியாது. முந்தாநாள் பாரு. என்னையே சோடா பாட்டிலை வச்சி அடிக்க வந்துட்டான். அதனால என் சின்ன மாமா பேத்தி இருக்காள்பாரு கிராமத்துல. அவளை அத்தானுக்கு கட்டி வச்சிடலாமுன்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்றே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/87&oldid=1133778" இலிருந்து மீள்விக்கப்பட்டது