பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வளர்ப்பு மகள்

என்ன எழுதியிருப்பான் என்பதை அனுமானித்து, அவன் வீட்டுக்குள் வந்ததும், எல்லோரிடமும் அந்தக் கடிதத்தைக் காட்டி அவனைக் கிழித்துப் போடவேண்டும் என்று நினைத்தாள் அவனை, பாதி காயாத சாண வறட்டிகளாலேயே அடிக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன். தனக்குக் கடிதம் எழுதியிருக்கிறான் என்பதைவிட, கஷ்டப்படுகிற ஒரு பெண், பணக்காரப் பையன் கூப்பிட்டால் போயிவிடுவாள் என்பதுபோல் அவன் நினைக்கிறான் என்று உணர உணர. அவள் பத்ரகாளியாகிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில், தனக்கு இவ்வளவு கோபம் இருக்கிறதா என்றுகூட ஆச்சரியப்பட்டு அசந்து போனாள்.

அந்தச் சமயத்தில், அவள் தந்தை பெருமாள் வந்தார்.

"என்னம்மா இங்கே நிற்கே? இன்னைக்கு வியாபாரத்துக்குப் போன இடத்துல், ஒரு பயல் என்கிட்ட கேட்காம்லே, என் கோணிமூட்டையை பஸ்ல ஏத்திட்டான். கோபத்துல் ஒரு தட்டு தட்டுனேன். ஒரு பல்லு கீழே விழுந்திட்டுது. கழுதைப் பயலுக்கு. நான் அடிக்கு முன்னாலேயே பல்லு ஆடிக்கிட்டு இருந்திருக்குமுன்னு நினைக்கேன். அந்தச் சமயம் பார்த்து, ஒரு போலீஸ்காரன் ஓடி வந்தான். கோணிக் கட்டை அப்படியே போட்டுட்டு, எங்கெல்லாமோ ஓடி, எதிர்ல வந்த பீஸ்ல ஏறி எப்படியோ வந்துட்டேன். கடைசில, அவனுக்கு, பல் டாக்டருக்கு இருபது ரூபாய் கொடுக்காத அளவுக்கு லாபம். எனக்கு நூறு ரூபாய் கோணி நஷ்டம் காலத்தைப் பாரு நாம எட்டடி பாய்ந்தால், நம்ம தரித்திரம் பத்தடி பாயுது. ரேசுக்குப் போகும்போதுகூட இப்படி நஷ்டம் வரல".

ஒரு குழந்தை, பள்ளியில் நடப்பதை அம்மாவிடம் சொல்வதுபோல், தன்னிடம் சொல்வதைக் கேட்டு, அவர் நூறு ரூபாய் நஷ்டப்பட்டதற்காக ஆறுதல் சொல்வதா அல்லது ரமணன் பயல் கொடுத்த கடிதத்தைக் காட்டி ஆறுதல் பெறுவதா என்பது புரியாமல், அவள் தவித்தாள். இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தாள்.

வேண்டாம். இந்த லட்டரை பெரிசாக்க வேண்டாம். அப்பா அவனைக் கொலை பண்ணினாலும் பண்ணிடுவார். அதோடு தெருவுக்கு மறுபக்கம் இருக்கவங்க "இவள் வாங்காமலா அவன் கொடுப்பான்னு"கூட கூசாமல் சொல்லலாம். விஷயத்தை அப்படியே விட்டு அவன் மேலும் மேலும் எழுதினால் அப்போ பார்த்துக்கலாம். இப்போ வேண்டாம்.

மல்லிகா. கைக்குள் கசங்கியிருந்த கடிதத்தை அப்பாவுக்குத் தெரியாமல் இடுப்பில் வைத்து ஒரு கையால் அதைப் பிடித்து. மறு கையால் அதைக் கிழித்து. பிறகு இரண்டு கரங்களையும் பின்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/94&oldid=1133789" இலிருந்து மீள்விக்கப்பட்டது