பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைச் செட்டி 5 போய் ஏதாவது சொன்னல், அவளுக்கு ஆறுதலாக இரா மல் அவள் துக்கத்தைத் தூண்டிவிடுமென்று அவளுக்குத் தெரியும். ஆகவே அவள் சமையலறைக்குள்ளே புகுக் தாள். இப்போது ரங்கத்தின் அகத்திரையில் பழைய நாட கத்தின் இரண்டாவது காட்சி ஓடியது. ★ "என்னடி பைத்தியம்?' என்று அம்மா கேட்டாள். "வளை அம்மா” என்று சிரித்துக்கொண்டே ரங் கம் சொன்னுள். - "அது தெரிகிறது. இந்த அற்புதமான கருவளே யலே எங்கே சம்பாதித்தாய்?” - "அத்தான்தான் போட்டான் அம்மா." 'நீ ஒரு பைத்தியம்; அவன் ஒரு பைத்தியம். கைக்கு மூன்ருகப் போட்டுக்கொண்டாயோ? மூன்று கூடாதடி முதலில் இதை உடைத்தெறி.” 'இல்லையம்மா, நாராயணன்தான் காவேரியிலிருந்து பொறுக்கிக்கொண்டு வந்தான்." 'அட கிரகசாரமே, எந்த எச்சில் துப்பலில் இருங் ததோ, இதோ நானே உடைத்தெறிகிறேன். அழகு தான் போ!' என்று சொல்லி அம்மா அவற்றை உடைத்துவிட்டாள். - 'போ அம்மா' என்று ரங்கம் சிணுங்கிளுள். அவளுக்கு அழுகை வந்துவிட்டது. 'உன் அருமை அத்தான் உன்னேக் கல்யாணம் பண்ணிக்கொண்டு கை கிறையத் தங்கவளை போடட்டும். இந்த அசட்டுப் பிசட்டு வளையலெல்லாம் எதற்கு? நல்ல நாளும் அதுவுமாய், மூன்று வளை போட்டுக்கொண்டாயே; போதும் போ, சமத்து'