பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதல் உண்டா? g? 'இது எங்கே அப்பா வாங்கினுய்?" 'இங்கேதான்." . 'இந்த மாதிரிப் பொம்மை கல்கத்தாவில் கிடைக் குமோ?" "அதென்ன. அது கல்கத்தாவைப் பற்றி நீ எங்கே கேள்விப்பட்டாய்? அங்கே பொம்மை இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?" 'கிடைக்குமா? சொல்லேன்.” 'கிடைக்கும்" என்று புன்னகை பூத்தபடியே’ சொன்னர் சந்திராவின் தகப்பனர். "அப்படியால்ை ஒரு காகிதம் எழுது அப்பா." r பொம்மை இங்கே கிடைக்கிற போது, அங்கே எதற்குக் காகிதம் எழுதவேணும்?" r 'இல்லை, இல்லை. சாக்தாவுடைய அப்பாவுக்கு எழுத வேணும். அவளுக்கும் இந்தமாதிரி பொம்மை ஒன்று வாங்கி அனுப்புங்கள் என்று எழுதவேணும்.” "அது யார் சாந்தா?” "அதுதான், அம்மா இல்லை பார்; அந்தச் சாந்தா. அவளுக்கு அப்பா கல்கத்தாவில் இருக்கிருர். அவருக்கு எழுதவேணும்; பொம்மை வேணுமென்று எழுதவேணும். சாக்தா அழுகிருள்; சித்தி அடிக்கிருள், கட்டிப் போடு கிருள் என்று காகிதம் எழுதவேணும்.' அப்பாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை; சரி, சரி; காகிதம் எழுதலாம்” என்று சொல்லிவிட்டுத் தம் காரி யத்தைக் கவனிக்கப் போய்விட்டார். ★ வீட்டுக்கு யாரோ பாட்டி வந்திருந்தாள். புராணக் கதைகளெல்லாம் தெரிந்தவள். வேதாந்தப் பாட்டுக்கள் வ-செ-7 3.