பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வங்ாச் செட்டி சட்டென்று குழந்தை பதில் சொல்லவில்லை. அவள் புறக் காட்சிக்கு அப்பாலல்லவா இருந்தாள்? 'இல்ல்ை அம்மா. சாந்தாவுக்கு ஒன்று கொண்டுபோய்க் கொடுக்கட்டுமா?" 'ஏன், அவள் வீட்டில் பண்ணிக் கொடுக்கமாட்டார் களா?" அவளுக்கு அம்மா இல்லேயாமே! அம்மா இருந்தால் தான் பட்சணம் தினமும் கிடைக்குமென்று அண்ணு சொல்கிருன். ஏன் அம்மா, நீயே அவளுக்கு அம்மாவாக இருந்துவிடேன்' - 'போடி பைத்தியம்' என்று சிரித்துக்கொண்டே போய்விட்டாள் அம்மா. ★ அப்பா வந்தார். கையில் ரப்பர் பொம்மை ஒன்றை வரும்போது கடையில் வாங்கிவந்தார். வரும்போதே, சங் திரா சந்திரா!' என்று கூப்பிட்டுக்கொண்டே வந்தார். "ஏன் அப்பா?' என்று கன்றுக் குட்டிபோல் துள்ளிக் குதித்து ஒடிப்போய் அவர்முன் நின்ருள் குழந்தை. "இதோ பார், உனக்குப் பொம்மை. நன்ருயிருக் கிறதா?” என்று அப்பா சந்திராவின் கையில் அதைக் கொடுத்தார். - r சந்திரா அதை ஆவலோடு வாங்கிக் கொண்டாள். "இந்தப் பொத்தான் எதற்கு அப்பா?' என்று கேட் டாள். - "அதை அழுத்திப் பார்.” - அவள் அழுத்தினுள். கீச்சென்று பொம்மை கத்தியது. திடுக்கிட்டுக் குழந்தை அதைக் கீழே போட்டுவிட்டாள். உட்னே அப்பா இடியிடி என்று சிரித்தார். அவளும் சிரித் தாள். பொம்மையைக் கையிலே எடுத்துக்கொண்டாள்.