பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை உண்டா? ఆశీ "சாந்தா.ரொம்ப அழுகிருள். அவள் சித்தி அவளை அடிக்கிருள். அதை எழுதவேணும்.” 'உன்னேக்கூடத்தான் அம்மா அடிக்கிருள். அதையும் எழுதட்டுமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான். சந்திரா யோசனையில் ஆழ்ந்திருந்தாள். - சாந்தா வெளியிலே வந்து விளையாடவே முடியாது, அண்ணு' என்று இரக்கக் குரலோடு கூறினுள். 'ஏளும்?” "அவள் சித்தி அவளைக் கட்டிப் போட்டிருக் கிருள்." "எதற்காக?" 'அவள் விஷமம் பண்ணுகிருளாம். பாவம் அவ ளுக்கு அம்மா இல்லையாமே! ஏன் அண்ணு, சம் அம். மாவே அவளுக்கு அம்மாவாய் ஆய்விட்டால் என்ன அண்ணு' - 'போ, போ, வாய்க்கு வந்ததெல்லாம் உளருதே. நான் பள்ளிக்கூடம் போகவேணும்.” 大 - சந்திரா பட்சணம் தின்று கொண்டிருந்தாள். மெது வாகத் தின்றுகொண்டிருந்தாள். அவள் மனத்தில் ஏதோ ஒரு வேதனே கலந்த யோசனை. அதனல் குழந்தை பட்சணத்தைச் சுவைத்துத் தின்னவில்லை. கையால் மெது வாகப் பர்பியைப் பிட்டுக் கொஞ்சங் கொஞ்சமாக வாயில் இட்டுக் கடித்தாள். அவள் கண்ணில் வெளிப் பார்வை இல்லை. அது எங்கோ சிந்தனே உலகத்தில் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அம்மா அங்கே வந்தாள். 'என்னடி இது? அரை மணியாக இதைத் தின்று கொண்டிருக்கிருய்?" என்று கேட்டாள்.