பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை உண்டா? 'வங்காள கவர்னர் கல்கத்தாவில் ஒரு புத்தகசாலை யைத் திறந்துவைத்தார். அதற்கு பர்த்வான் மகாராஜா ஒரு லக்ஷ ரூபாய் நன்கொடை யளித்தார்” என்று தாமோ தரன் சமாசாரப் பத்திரிகையைச் சத்தம் போட்டுப் படித் துக்கொண்டிருந்தான். பக்கத்தில் இருந்த குழந்தை சந்திரா, 'பொம்மை பார்க்கவேண்டும்” என்று சொன் ள்ை. தாமோதரன் கடைசிப் பக்கத்தில் இருந்த படத் தைக் காட்டினன். "இது என்ன?" என்று சந்திரா கேட் டாள். 'கல்கத்தாவில் புத்தகசாலையைக் கவர்னர் திறந்து வைக்கிருர் என்று கீழே எழுதி இருந்ததை வாசித்தான் தாமோதரன். "கல்கத்தாவா? அந்தக் கல்கத்தாவா?" என்று கேட் டாள் சந்திரா. 'எந்தக் கல்கத்தா? உனக்கு ரொம்பத் தெரியுமோ?” என்று தாமோதரன் கேட்டான். - "தெரியுமே! சாந்தாவின் அப்பா அங்கேதான் இருக் கிருர்?" - - - "எந்தச் சாந்தாவின் அப்பா?” 'கோகிலா மாமியகத்துச் சாந்தா?” "எந்தக் கோகிலா மாமி?' - "போ அண்ணு சும்மா சும்மா கேட்கிருய்!” என்று. சலித்துக்கொண்டாள் இளங் குழந்தை. - 'அண்ணு, நீ சாக்தா அப்பாவுக்குக் காகிதம் எழுது கிருயா? - - காகிதமா? எதற்கு?' -