பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது மலர்ச்சி 93. எனக்கு எழுதின கடிதங்களைப் படித்துப் பார். என் பெட் டியில் வைத்திருக்கிறேன். உன்னைப் பற்றி எப்படியெல் லாம் எண்ணிக்கொண்டிருககிருள் என்பதை அந்தக் கடி தங்கள் சொல்லும். அவள் குணத்தையும் தெளிவாக்கும்’ என்று என் காத்தனர். இவரிடம் கடைசி வேண்டுகோளே விடுத்தாராம். கல்லாக இருந்தாலும் அந்த உத்தமியின் வார்த்தைக்கு உருகிவிடுமே! இவர் உருகினது என்ன ஆச்சரியம்? தம் தங்கை இறந்தவுடன் என்னே அழைத்து வரவேண்டாம் என்று இருந்தாராம். ஆனல் அந்தப் பதி னேந்து நாட்களிலேயே இவருக்குப் பைத்தியம் பிடித்தது. போலாகிவிட்டதாம். படிப்புத் தெரியுமே அன்றி வாழத் தெரியாதவர் இவர்...... 'இப்போது நான் எப்படி இருக்கிறேனென்ரு கேட் கிறீர்கள்? இனிமேல் கான் பைத்தியக்காரத்தனம் செய்ய மாட்டேன். உனக்கு உதவியாக யாரையாவது வைத்துக் கொள்' என்று இவர் சொல்லிவிட்டார். அங்கே என்னுடன் இருந்த என் அத்தையை இங்கே அழைத்து வந்துவிட்டேன். எனக்கு இப்போது இங்கிலீஷ் தெரியும் அல்லவா? நாள் முழுவதும் அவர் புத்தகங்களே. அடுக்கு வதிலும் அட்டை போடுவதிலும் முனேந்திருக்கிறேன். இதுவே இன்னும் இரண்டு மாத வேலே கொள்ளும்... "அவர் எப்படி இருக்கிருர்?-என்ன இருந்தாலும் அவர் என் கனவரல்லவா? மேலே நான் என்ன சொல்வது? 'உங்கள் ஆசீர்வாதம் என்றைக்கும் இருக்கவேண்டும். இறந்த பிறகும் தெய்வமாக கின்று என் காத்தனர் என்னேக் காப்பாற்றுகிருர் என்றே நம்புகிறேன்...... 33 கடிதம் முழுவதும் இவ்வளவுதான் என்று எண்ணி விடாதீர்கள் முக்கியமான பகுதிகள் இவை. என்னவோ பாவம். அன்றும் தூரத்திலிருந்தபடியே பவானிக்கு நம் பிக்கை ஊட்டினள் கல்யாணி, இன்றும் மறைவில் இருந்த படியே ஊட்டுகிருள். அவள் பெயர் வாழட்டும்!