பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. வளைச் செட்டி கொண்டார். உண்மையில் அவர் இருந்ததே நான் இருந்த தற்கு ஒரு தடை போல இருந்திருக்கிறது. என்ன ஆச்சரியம் பாருங்கள்! அவர் இவருக்கு வேண்டிய எல்லா வற்றையும் கவனித்துக்கொண்டார். அதனால் இவருக்கு வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது. அவர் மறைந்த பிறகு இவருக்கு ஒன்றுமே ஒடவில்லை. எதற்கெடுத்தாலும் பிறரைக் கூப்பிட்டு அதை எடு, இதை எடு என்கிறவர் இவர். வேலைக்காரன் எப்போதும் இவருடன் இருந்து செய்ய முடியுமா? என் காத்தனர் பிராணனே விட்டுக் கொண்டு. எல்லாவற்றையும் செய்துகொண்டு வந்தார். செய்துகொண்டிருந்தவரைக்கும் அவர் அருமை இவருக் குத் தெரியவில்லை. அவர் போன பிறகு இப்போது சொல்லிப் புலம்புகிருர். அவள் அப்போது கிளிப் பிள்ளைக்குச் சொன்னது போல் சொன்னளே, கேட் டேன? கேட்டிருந்தால், அவள் சொன்னபடி உன்னே அழைத்து வந்திருந்தால் அவளுக்கும் சிரமமில்லை; எனக்கும் செளக்கியம். பேசத் துணையின்றி, உடன் இருந்து உதவி செய்ய ஒருவரின்றி, எனக்காக ஒடாக உழைத்துத் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். நான் பாவி! அவள் அருமையை அப்போதே அறியாமம் போனேன். கடைசி நேரத்தில் அவள் சொன்னபோது தான் சுரீரென்று பட்டது' என்று இப்போது சொல்லிச் சொல்லி உருகுகிருர். - ' 'இனி மேல் நான் அதிக நாள் இருக்கமாட்டேன். இத்தனே காலம் உனக்கு நான் எதாவது உபகாரம் செய் திருந்தால் அதற்குப் பிரதி உபகாரமாக ஒன்றே ஒன்றை எனக்குச் செய்ய வேண்டும். நான் செத்துப் போவது கிச்சயம். அந்தச் செய்தியை அவளுக்குத் தெரிவி. பிறகு அவளே அழைத்து வந்து வைத்துக்கொண்டு குடியும் குடித்தனமுமாக வாழ். அவள் நல்ல உத்தமி. அவள்