பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது மலர்ச்சி 9r இரண்டு வாரங்கள் கடந்தன. திடீரென்று. பவானிக்கு ஒரு தந்தி வந்தது. அவளுடைய கணவர் உடனே புறப்பட்டு வரும்படி உத்தரவிட்டிருந்தார். அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்னிடம் வந்து தங்தியைக் காட்டினுள். 'என் சகோதரியைப் போல உங்களே கினேத்திருக்கிறேன். இது நம்பக்கூடிய தந்தியா? என்ன செய்வது? சொல்லுங்கள்” என்று கேட்டாள். "நீங்கள் என்ன குழந்தையா? உங்களே யார் ஏமாற்ற முடியும்? போய்ப் பாருங்கள். கடவுள் கிருபையால் நல்ல தாகவே இருக்கும். இல்லாவிட்டால் திரும்பி வருவதற்கு, யார் தடை சொல்லப் போகிரு.ர்கள்?' என்றேன். பவானி புறப்பட்டுவிட்டாள். செளக்கியமாகப் போய்ச் சேர்ந்ததாகச் சுருக்கமாக ஒரு கார்டு போட்டாள். அவ்வளவுதான்; ஒரு மாசம் வரையில் கடிதமே இல்லை. பிறகு ஒரு நீண்ட கடிதமே வந்தது. கடிதமா அது? பெரிய கட்டுரை! - - “......கடவுள் கண் திறந்து பார்த்துவிட்டார் அம்மா. நான் தனிமையிலே விட்ட கண்ணிரெல்லாம் சேர்ந்து இன்று இங்கு இன்பப் பயிரை விளையச் செய்துவிட்டது. இந்தச் சமயத்தில் அந்தப் புண்ணியவதியை நினைக்க வேண்டும். என் வாழ்நாள் உள்ள வரையில் அவரை மறக்க முடியாது. எனக்கு முதல் தெய்வம் அவர்தாம். அப்புறங்தான் இவர். ஆம்! என் காத்தனர் கல்யாணியைத் தான் சொல்கிறேன். அவர் 'என் உயிரைக் கொடுத்தாவது உன்னே என் அண்ணுவோடு சேர்ப்பேன்’ என்று முன்பு எழுதினரே, அது எவ்வளவு நிஜமாகப் போய்விட்டது! அவர் இருக்கிற வரைக்கும் என்னே அழைக்காத இவர், அவர் மறைந்தவுடன் புத்தி திரும்பி என்னே அழைத்துக்