பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£90 வளைச் செட்டி "விஷயத்தைச் சொல்லுங்கள்' என்று பின்னும் கேட்டேன். "நான் யாரை என் வாழ்வுக்கு ஆதாரம் என்று நம்பி வாழ்கிறேனே, எவருடைய கடிதங்கள் என்னுடைய வாழ்க்கையில் புது மலர்ச்சியை உண்டாக்கினவோ, எந்த ஆத்மா என் நன்மைக்காக அல்லும் பகலும் பாடுபட் டதோ அந்தக் குணவதி, என் காத்தனர் என்னேத் தவிக்க விட்டு விட்டுப் போய்விட்டார்' என்று அழுதாள் அவள். நானே அயர்ந்து போனேன். பவானியின் உடல் எங் கள் ஊரில் வாழ்ந்தாலும்அவள் உள்ளம் பங்களுரில் வாழ்க் தது. அவளுடைய கணவரோடே வாழ்ந்தது என்று கூடக் சொல்லலாம். அப்படி வாழ்வதற்குத் துணையாக இருந் தவை கல்யாணியின் கடிதங்கள். என்றைக்காவது நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை அந்தக் கடிதங்கள் ஊட்டி வந்தன. இனிமேல் யார் அப்படிக் கடிதம் எழுதப் போகிருர்கள்? கடிதம் கிடக்கட்டும்; பவானியை அவள் கணவரோடு சேர்க்க இனிமேல் யார் முயற்சி செய்யப் போகிருர்கள்? - நான் பவானியை எப்படித் தேற்றுவது? தேற்று வதற்கு என்ன இருக்கிறது? கடலிலே கப்பல் ஆழ்ந்த வியாபாரிக்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்?" 'தெய்வங்தான் உங்களுக்குத் துணை இருக்க வேண்டும். செத்துப் போனவள் தெய்வமாக இருந்து உங்களுக்கு நன்மை செய்ய வேண்டும்” என்று ஏதோ ஒப்புக்குச் சொல்லி வைத்தேன். • 'இனிமேல் பவானியின் வாழ்வில் வேறு அத்தியாயம் தொடங்கப்போகிறது. அது நிச்சயமாக இருள் அடர்ந்த தாக இருக்கும் என்பதை எண்ணியபோது எனக்குப் பகீரென்றது. மெல்ல விடை பெற்றுக்கொண்டு வந்தேன். ★