பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது மலர்ச்சி. 89 விடம் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறேன். உன்னே அழைத்துக்கொண்டு வந்து விடும்படி சொல்கிறேன். என் ளுல் ஒன்றும் செய்ய முடியவில்லை யென்று சொல்கிறேன். அவர், அந்தச் சனியனைப் பற்றிப் பேசாதே. உன்னல் ஆகாவிட்டால் ஒரு வேலைக்காரியைப் போட்டுவிடுகிறேன். நீ ஒய்வு எடுத்துக்கொள்' என்கிரு.ர். என் உயிரைக் கொடுத்தாவது உன்னே இங்கே கொண்டுவந்துவிடவேண்டு மென்று ஆசைப்படுகிறேன். என் ஆசை நிறைவேறுமா?" -இப்படி ஒரு கடிதம். - பங்களுர் நடவடிக்கைகளே அடிக்கடி கல்யாணியின் மூலம் பவானி தெரிந்துகொண்டு வந்தாள். தன் நாத்த ருைக்கு உடம்பு பலஹீனமாக இருப்பதாகத் தெரிந்த போது அவளேப் போய்ப் பார்க்க வேண்டுமென்று எண் ணரினுள். 'வரட்டுமா?’ என்று எழுதினுள். 'வர வேண்டாம்” என்று எழுதிவிட்டாள் அவள். அவள் வாக்கைத் தேவவாக்கியமாக மதிப்பவளாகையால் இவள் பேசாமல் கின்று விட்டாள்.

  • ★ அன்று பவானி பள்ளிக்கூடத்துக்கே வரவில்லே என்று என் மகள் சுந்தரி சொன்னுள். ஆரோ செத்துப் போனதாகக் கடிதாசி வந்ததாம், அம்மா" என்ருள். யாராக இருக்கும் என்று யோசனை பண்ணிப் பார்த்தேன். பயங்கரமான எண்ணங்களெல்லாம் உதித்தன. மேலே சிங் தனேயை ஒடவிடாமல் பவானியையே தேடிச் சென்றேன். அவள் தன் வீட்டுக் கூடத்தில் தலையை முடிந்து கொள்ளாமல் கண்ணிரும் கம்பலையுமாக உட்கார்ந்திருக் தாள். 'என்ன சமாசாரம்?' என்று கேட்டேன்.

"என்னத்தைச் சொல்லுவது? என் வாழ்வே போய் விட்டது' என்று விம்மினுள்.