பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வளைச் செட்டி காரமாக இருக்கும் இது அவருக்குத் தெரியவில்லையே!” -இப்படி ஒரு கடிதத்தில் எழுதியிருந்தாள். 'கேற்று ராத்திரியெல்லாம் நான் அழுது அழுது தலைவலியை வருவித்துக் கொண்டேன். நேற்று மாலை அண்ணுவைப் பார்க்கச் சென்னேயிலிருந்து ஒரு பேராசிரி யர் வந்திருந்தார். அவர் தம் மனேவியையும் அழைத்துக் கொண்டு வந்தார். இரண்டு பேராசிரியர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். வந்தவர் வயசானவர். அவர் மனேவி பழைய சம்பிரதாயத்தை அநுசரிக்கிறவள். அந்த அம்மாள் உள்ளே வந்தாள். என்னைப் பார்த்தாள். ஏன் அம்மா நெற்றிக்கு இட்டுக் கொள்ளவில்லை? என்று கேட்டாள். நான் என் கிலேயைச் சொன்னேன். இவருக் குப் பெண்டாட்டி இல்லையா? என்று தொடர்ந்து கேட் டாள். ஊருக்குப் போயிருக்கிருள்” என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் வீட்டு வேலைக்காரி, 'அம்மா இங்கே வருகிறதே இல்லை' என்று சொல்லிவிட்டாள். சரி தான். படித்த பெண்போலிருக்கிறது. ஏன் வேருெரு கல்யாணம் பண்ணிக்கொள்ளக் கூடாது? அது கிடக்கட் டும். உனக்கு ஒன்று சொல்லுகிறேன். நீ கோபித்துக் கொள்ளக்கூடாது. வாழ்க்கை இழந்த உன்னைப் போன்ற வர்கள் வாழ்கிறவர்களுக்குக் குறுக்கே முள்ளாக கிற்கக் கூடாது. என்ன, நான் சொல்கிறது தெரிகிறதா? என்று கேட்டாள். நான் உங்களை ஒன்ருக வாழவிடாமல் தடுக் கிறேன் என்று அந்த அம்மாள் தீர்மானம் செய்துவிட் டாள். இதை கினேத்து பீனேத்து ராத்திரி எல்லாம் நான் தாங்கவில்லை."-இது ஒரு கடிதம். "மன்னி, உண்மையைச் சொல்கிறேன். எனக்கே இந்த வாழ்வு வெறுத்துப் போயிற்று. உடம்பும் சரியாக இல்லை. அடிக்கடி மயக்கம் மாதிரி வருகிறது. அண்ணு