பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வ8ளச் செட்டி பாடத் தெரிந்தவள். சந்திராவின் தாய்க்குத் தெரிந்தவள். அப்படியே அடிக்கடி வந்து ஏதாவது நல்ல புராணக் கதையைச் சொல்லி விட்டுப் போவாள். அன்று எதோ பேசிக்கொண்டிருந்தாள். சந்திராவும் அம்மாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். பாட்டி பேச்சுக்கிடையில், கிளியைக் கூட்டில் அடைப் பவர்கள், வாயில்லா ஜீவனே வதைப்பவர்கள், வீளுக ஒரு வரைக் கட்டிப் போடுகிறவர்க்ள் இவர்களே யெல்லாம் பக வான் தண்டனைக்கு உள்ளாக்குவார்' என்று சொன்னுள். எங்கேயோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரா வின் காதில் இந்தப் பேச்சு விழுந்தது. அவளுக்குப் புரியும் செய்தி அதில் இருந்தது. "என் பாட்டி, குழந்தையைக் கட்டிப் போடுகிறவர்களைச் சாமி ஒன்றும் பண்ண மாட் டாரா?' என்று திடீரென்று சந்திரா கேட்டாள். பாட்டி ஆச்சரியப்பட்டுப் போனள். குழந்தைக்குத் தன் பேச்சைக் கவனிக்கும் அறிவு இருப்பதை அறிந்து தான் அவள் வியப்பை அடைந்தாள். "அதென்ன, நீ உன் குழந்தையைக் கட்டிப் போடுகிருயா, என்ன?" என்று பாட்டி சந்திராவின் தாயைக் கேட்டாள். அதற்குக் குழந்தையே பதில் சொல்ல முக்திக்கொண்டாள். 'இல்லை பாட்டி. சர்ந்தாவை அவள் சித்தி கட்டிப் போடுகிருள். நீ போய்ச் சொல்லு. சாமி கண்ணேக் குத்திவிடுமென்று சொல்லு' என்ருள். குழந்தையின் அறிவைக் கண்டு பாட்டி அதன் கன்னத்தைத் தடவிக் கையைக் கீழே சொடுக்கித் திருஷ்டி கழித்தாள். - "யார் அம்மா, அந்தச் சாந்தா?” குழந்தை பதில் சொல்ல வந்தாள். அதற்குள் அவள் தாயே சொல்லத் தொடங்கினள்.