பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை உண்டா? 99 "இதோ நாலு வீடு தள்ளி அந்த ஒட்டு வில்லை வீடு இருக்கிறதே, தெரியுமா? அதுதான், கிழவர் ஒருவர் வாசல் திண்ணையில் லொக்கு லொக்கென்று இருமிக்கொண்டே இருப்பாரே, அந்த வீடு.” கோகிலா வீடுதானே? தெரியாதா எனக்கு? சொல்லு. அங்கே என்ன?” - "அவள் அக்காவுக்கு ஒரு குழந்தை. அந்தக் குழந்தை தெரியுமோ இல்லையோ?” . தெரியுமே.” 'கோகிலாவின் அத்திம்பேர் கல்கத்தாவில் வேலையாக இருக்கிருர். இந்தக் குழந்தையை இவளிடம் விட்டுவைத் திருக்கிரு.ர். அது விஷமம் செய்கிறதாம். அன்று நான் அந்த வீட்டுக்குப் போயிருந்தேன். சங்திராவும் வந்தாள். அந்தக் குழந்தையைக் கட்டிப்போட்டிருந்தார்கள். அதைப் பார்த்தது முதல் இவள் அங்கலாய்த்துப் புலம்பு கிருள்!” என்ருள் தாய். х 'குழந்தையின் மனசு பூப்போல இருக்கிறது. அதிலே, கருணை வழிகிறது” என்று பாட்டி மதிப்புரை கூறிள்ை. 'அம்மா இல்லாவிட்டால்தானே கட்டிப் போடு வார்கள்?' என்று குழந்தை இடைமறித்துக் கேட்டாள். பாட்டி பதில் சொல்லவில்லை. "என் பாட்டி, சாந்தாவுக்கும் எங்கள் அம்மாவே அம்மாவாக இருக்கட்டுமே; இருக்கக் கூடாது?" . பாட்டி வியப்பில் மூழ்கினள். அவளுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. - 'போடி பைத்தியம்! இதெல்லாம் உனக்கு எதற்கு? போய் விளையாடு” என்று சொல்லி அவளுடைய தாய் எழுங் தாள். பாட்டியும் விடை பெற்றுக் கொண்டு சென்ருள். ★