பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வளைச் செட்டி பிள்ளேக்குக் கத்தியினல் நறுக்குவது ஒரு பராக்கிரமச் செயல். அதிலே ஒர் ஆனந்தம். அதற்கு மேல் கயிற் றுக்கு ஏதாவது உபயோகம் உண்டா என்று யோசிக்கும் வேலே அவனுக்கு அனாவசியம். அவன் கயிற்றை நறுக்குவதற்காகவே நறுக்கினன். அவன் தங்கை சந்திரா மிகவும் கூர்மையாக அதைக் கவ னித்துக் கொண்டே இருந்தாள். நறுக்கும் பராக்கிரமச் செயலைக் கண்டு வியக்கவில்லை. அவளுக்கு அந்தக் காட்சி என்ன என்னவோ ரகசியங்களைச் சொல்லியது. வெகு காலமாக விளங்காத புதிரை விடுவித்ததுபோல இருந்தது. ★ கோபாலன் பென்சில் சிவ வைத்திருந்த கத்தி அது. அதை எங்கே வைக்கிருன் என்று உளவறிந்து தெரிந்து கொண்டாள் சந்திரா. ஏதோ ராஜ்யத்தைப் பிடிக்கப் போகிறவளேப் போல அவள் யோசனை செய்தாள். குழந்தை மனசிலே தொடர்ச்சியாக, காரண காரியத் தோடு, இதற்கப்புறம் இதுவென்று யோசிக்கத் திறமை எது? ஏதோ யோசனை செய்தாள். அந்த யோசனையிலே ஒரு முடிவுக்கும் வந்தாள். அண்ணு விளையாடப் போயிருந்தான். மெதுவாக அவன் பெட்டியைத் திறந்து கத்தியை எடுத்துக் கொண் டாள். அடிமேல் அடிவைத்து வெளியிலே வந்தாள்; திரு. டனைப்போலப் பயந்து கொண்டு கடந்தாள். சாந்தாவின் வீட்டுக்கு மெதுவாகப் போய்ச் சேர்ந்தாள். அவள் மார்பு படபடவென்று அடித்துக்கொண்டது. உடம்பு கடுங்கியது. ஆலுைம் விடவில்லை. வீட்டுக் குள்ளே நுழைந்தாள். கூடத்திலேதான் சாந்தா இருப் பாள். சில நேரம் குளிப்பாட்ட, சாப்பிடக் கட்டவிழ்த்து விடுவார்கள். அநேகமாகக் கட்டிப்போட்டுத்தான் வைத்