பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதல் உண்டா? 103 திருப்பார்கள். சந்திரா பார்க்கிறபோதெல்லாம் அவள் கால் கட்டோடேதான் இருந்தாள். சந்திரா கூடத்துக்கு வந்தாள். ஏதோ சிணுங்கிக் கொண்டிருந்த குழந்தை அவளேக் கண்டவுடன், "சந்தா" என்று மழலைச் சொல்லால் அழைத்தது. சந்திரா அந்தக் குழந்தையை அணுகினள். அதற்கு விடுதலே அளிக்கப் போகிறவளாக கினைப்பு. ஆம். அண்ணு விடமிருந்து தெரிந்து கொண்ட வித்தை அது. ஒருவரா, வது இதைச் செய்ய முன்வரவில்லை. சந்திரா முன் வந்து விட்டாள். அவள் காலப் பிடித்தாள். கயிற்றைக் கண்டாள். கினேத்த காரியத்தைச் செய்ய முனைந்தாள். கீச்சென்ற சத்தம் வீட்டில் கொல்லப் பக்கம்வரை யில் கேட்டது. குழந்தை சாந்தா வீல் வீலென்று கதறத் தொடங்கி விட்டாள். அவள் காலில் கத்திக் காயம். கயிறு அறுபடவில்லை; காலில் காயம்பட்டு விட்டது. சந்திராவும் அழ ஆரம்பித்துவிட்டாள். இந்தக் கூக்குரலேக் கேட்டுச் சித்தி ஓடி வந்தாள். அவள் கண்டது என்ன? சாந்தாவின் காலிலே கத்திக் காயம். பக்கத்திலே கத்தி. சந்திரா! அடி பாவி!' என்று ஓடிவந்து சந்திராவின் முதுகில் ஓங்கி ஒரடி அடித்தாள் சித்தி. - குழந்தை சந்திரா கதிகலங்கிப் போனள். அவள் கினைத்தது என்ன? கடந்தது என்ன? சாந்தாவுக்கு என்றே னும் விடுதலை உண்டா?