பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகைக் கதை அன்று கார்த்திகை, பனமரத்துப் பாளேயத்தில் தங்கும்படியாக நேர்ந்தது. அங்கே ஒரு சிவன் கோயில் இருக்கிறது. ஊர் முழுவதும் விளக்கேற்றி வைத்துக் கார்த்திகையைக் கொண்டாடினர்கள். சிவன் கோயிலி லும் உற்சவம் கடந்தது. நானும் சுவாமி தரிசனம் செய் யக் கோயிலுக்குப் போனேன். கோயிலில் கிறைய விளக் குக்களைப் போட்டிருந்தார்கள். சின்ன ஊராக இருந்தா லும் அந்த ஊர் வாசிகளுக்குப் பக்தி அதிகமாகவே இருந் தது. ஆலய தரிசனத்துக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்ததிலிருந்தே அது புலயிைற்று. . மற்ற ஊர்களிலெல்லாம் நடப்பதுபோலவே உற்சவ மூர்த்தியைத் தனியே எழுந்தருளப் பண்ணினர்கள். ஆல யத்துக்கு வெளியே எழுந்தருளச் செய்வித்தார்கள். சொக்கப்பனை கொளுத்தும் இடம் இன்னதென்று தெரிய வில்லை. கோயில் வாசலில் கூம்பு ஒன்றையும் காணவில்லை. நண்பர் ஒருவரைக் கேட்டேன். 'இந்த ஊர்க் கார்த்தி கையே ஒரு தனி விதம். இங்கே சொக்கப்பனை கொளுத்து வதில்லை" என்ருர், 'ஏன்?' என்று கேட்டேன். அதெல் லாம் குருக்களைக் கேட்டால் தெரியும்' என்று சொல்லி விட்டார். - . சுவாமியிடம் இருந்து எல்லாவற்றையும் கடத் தும் போது குருக்களைப் போய்க் கேட்க முடியுமா? என்ன. கடக்கிறது என்று கவனித்தேன். கோயிலின் வாசலில் ஒரு பெரிய விளக்கை வைத்தார்கள். சுவாமியை அங்கே எழுந்தருளப் பண்ணி, அந்த விளக்குக்குப் பூஜைசெய்தார்