பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகைக் கதை - 105 கள். பிறகு அதைக் கோயிலின் கோபுரத்தின் மேல் வைத்தார்கள். அப்பால் சுவாமி கோயிலுக்குள் எழுங் தருளிப் போய்விட்டார். உள்ளுர் மேள காரன் மேளம் வாசித்தான். ஜனங்கள் சந்தோஷமாக உற்சவத்தில் கலந்து கொண்டார்கள். - எல்லாம் ஒருவிதமாக முடிந்த பிறகு நான் குருக்களி டம் போனேன். அவர் என்னேக் கண்டவுடன் விபூதி எடுத்துக் கொடுத்தார். நான் தட்டில் ஒரணுவைப் போட்டு விட்டு, 'ஒரு சந்தேகம்' என்றேன். 'என்ன?’ என்று கேட்டார். "இந்த ஊரில் ஏன் சொக்கப்பனை கொளுத்து வதில்லை? எல்லா ஆலயங்களிலும் கொளுத்துகிருர்களே! இங்கே மாத்திரம் இல்லாததற்குக் காரணமாக ஏதாவது ஐதிஹ்யம் உண்டோ?" என்று கேட்டன். "அதுவா? இந்தத் தலபுராணத்தில் அந்த விஷயம் இருக்கிறது. லோகத்தில் வேறு எங்கும் இல்லாத அற்பு தம் அது' என்று பீடிகை போட்டார் குருக்கள். - "புராணத்தில் என்ன இருக்கிறது' என்று விநய மாகக் கேட்டேன். குருக்கள் சொல்லத் தொடங்கினர். ★ இந்த rேத்திரத்திற்குத் தாலவனம் என்று திரு நாமம். சுவாமி தாலவனேசுவரர்; அம்பிகை தாலவன சுந்தரி. இங்கே இந்திராதி தேவர்களும், அகத்தியர் முதலிய மகரிஷிகளும் பூஜை செய்து தம்முடைய இஷ்ட சித்திகளைப் பெற்றிருக்கிருர்கள். இந்தத் தலமே அகத் தியரால் உண்டானதுதான். அகத்தியர் ஹிமாசலத்தி விருந்து தெற்கே வந்த போது ஒரு நாள் இவ்விடத்தில் தங்கினர். ஸ்நானம் செய்து சிவபூஜை செய்ய எண்ணி னர். நைவேத்தியத்துக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அப் போது இவ்விடத்தில் எங்கே பார்த்தாலும் பனமரங்கள்