பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வளைச் செட்டி அடர்ந்திருந்தன; வேறு மரம் ஒன்றும் இல்லை. நைவேத் தியத்துக்கு ஒன்றும் இல்லையே என்று அகத்தியர் சிறிது சஞ்சலம் அடைந்தார். அப்போது ஒரு பனமரத் திலிருந்து முதிர்ந்த பனம் பழம் ஒன்று தொப்பென்று கீழே விழுந்தது. இதுவும் பரமேசுவரன் கிருபையே’ என்று எண்ணிய அகத்திய முனிவர் அந்தப் பனம் பழத்தை எடுத்து வந்து அதையே நிவேதனம் செய்தார். நிவேதனமான அது யார் காலிலேனும் பட்டுவிடுமே என்ற எண்ணத்தால் அங்கே அதைப் புதைத்துவிட்டுப் போய்விட்டார். சிவபிரானுக்கு விவேதனமான அந்தப் பழம் முளைத் துப் பனங்கன்ருகி வளர்ந்தது. அது ராத்திரி காலத்தில் பள பள வென்று ஜோதி மயமாகத் தெரிந்ததை ஒர் இடை யன் கண்டு சோழ மகாராஜாவுக்குப் போய்ச் சொன்னன். சோழன் மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது பனங்கன்றைக் கண்டான். அன்று இரவு வந்து பார்த் தான். அந்தப் பனங்கன்று ஜோதிமயமாக விளங்குவதை அவனும் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனன். இது ஏதோ அற்புதமாக இருக்கிறது. இந்தப் பிரதேசத்தில் தெய்விக சக்தி இருக்க வேண்டும் என்று கினைத்தான். அன்ற் இரவு அவன் தூங்கும்போது சிவபிரான் அவனு டைய கனவில் எழுந்தருளி, "அகத்தியர் பூஜை பண்ணிய போது நிவேதனம் செய்த பனம் பழத்திலிருந்து இந்தப் பனங்கன்று முளைத்திருக்கிறது. இதில் நாம் ஆவிர்ப்பவம் ஆகியிருக்கிருேம். இந்த இடத்தில் ஆலய கிர்மாணம் செய்து வாபீகூப தடாகங்களையும் அமைத்து வழி படுவா யாக!' என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். கனவு முடிந்ததும் சோழ மன்னன் தூக்கத்திலிருந்தும் எழுங் தான். உடம்பெல்லாம் புளகம் போர்ப்ப எழுந்து கின்று ஆடிப்பாடிக் கண்ணிர் வார இறைவன் திருவருளே கினேந்து