பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வளைச் செட்டி களோ!" என்று எண்ணிப் பார்த்தபோது எல்லாம் கன்முகக் காய்ந்த மட்டைகளாகவே இருந்தன. பல இடங்களில் கொளுத்திப் பார்த்தார்கள்; பற்றவே இல்லை. சோழனும் பிறரும் இதைக் கண்டு வியந்தார்கள். "இறை வன் திருவிளையாடல் ஆச்சரியமாக இருக்கிறதே! காய்ந்த மட்டையில் கனல் பற்ருமல் இருக்குமோ!' என்று ஒருவ ரோடொருவர் பேசிக் கொண்டார்கள். சோழ மன்னன், இன்னது செய்வதென்று அறியாமல் மயங்கி கின்ருன், அப்போது இறைவன் திருவருளால் அசரீரி வாக் கொன்று கேட்டது. 'நாம் இங்கே தாலவிருட்சமாக இருப்பதனல் கம் முன் பன மரத்தை எரிக்கும் சக்தி அக்கினிக்கு இல்லை” என்று அசரீரி சொல்வதைக் கேட்டு 'யாவரும் பின்னும் ஆச்சரியப்பட்டுப் போயினர். உடனே பெரிய விளக்கை ஏற்றி வைத்துப் பூஜை செய்து அதைக் கோபுரத்தில் கொண்டுபோய் வைத்தார்கள். அது முதல் இந்த ஆலயத்தில் சொக்கப்பனை கொளுத்துவதே இல்லை. கலி முற்ற முற்ற ஈசுவர கம்பிக்கை போய்விட்டது. புராணங்களில் கம்பிக்கை இல்லை. ஜோதிப்பனகூட வெறும் பனையாகிவிட்டது. அதோ இருக்கிறதே, ஒரு மேடை அங்கே தான் ஜோதிப்பனை இருந்ததாம். இப்போது அங்கே ஒரு வெறும் பனேயைக்கூட நடுபவர் கள் இல்லை. தாலவனேசுவரர் கிருபை வைத்தால் மறு படியும் ஜோதிப் பனே தோன்றலாம். . 2 குருக்கள் கதையைக் கூறி முடித்தார். தாலவன மென்ம் rேத்திரம் பனமரத்துப் பாளையமாகி விட்டது போலும் நான் அவர் சொன்ன கதையைப்பற்றி சினத்