பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகைக் கதை 10.இ. துக்கொண்டே போனேன். நான் தங்கியிருந்த வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டேன். அந்த வீட்டுக்கார கண்பர் பள்ளிக்கூட வாத்தியார். சாப்பிட்ட பிறகு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து அவரோடு பேசிக்கொண்டிருக் தேன். பேச்சுவாக்கில் குருக்கள் சொன்ன புராண வரலாற்றை அவரிடம் சொன்னேன். அந்த வாத்தியார் அதைக் கேட்டுச் சிரித்தார். 'இந்தப் பொய்ப் புரா னத்தை நீங்கள் நம்புகிறீர்களா?" என்று என்னைக் கேட்டார். . 'புராணக் கதையை நம்புகிறேனே. இல்லையோ அது கிடக்கட்டும். இந்த ஊரில் சொக்கப் பனை கொளுத் தாததற்குக் காரணம் ஏதாவது இருக்க வேண்டுமே!’ என்றேன். . "அதற்குப் புராணத்தில்தான் தேட வேண்டுமா? யாரோ பைத்தியக்காரன் ஒருவன் இந்தப் புராணத்தைக் கட்டி வைத்தான். அதை மற்றவர்களெல்லாம் மறந்து விட்டார்கள். இந்தக் குருக்கள் மாத்திரம் மறக்காமல் பிடித்துக்கொண்டிருக்கிருர். இந்தப் பட்டிக்காட்டுக் கோயிலைப் பார்த்தால் பிராகாரங்களும் மண்டபங்களும் இருந்ததாகத் தெரிகிறதா? அத்தனே மண்டபங்களில் ஒரு மண்டபத்தின் சின்னமாவது இருக்கிறதா? சோழ மக ராஜா வந்தானம்! கோயில் கட்டினம்ை!” 'பின்னே இதற்கு என்ன காரணம்?" 'உண்மையான காரணம் வேறு; பகுத்தறிவுக்குப் பொருத்தமான காரணம் அது. ஒன்று சொல்லுகிறே. னென்று நீங்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது. இந்தத் தேசத்தில் சரித்திர உணர்ச்சி என்பது பூஜ்யம். புராண மென்ருல் நம்புவார்கள். பூஜை செய்வார்கள். சரித்திரத் தைப் பற்றிக் கவலைகொள்ளவே மாட்டார்கள். படித்தவர்