பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வ&ளச் செட்டி களுக்கும் சரி, படிக்காதவர்களுக்கும் சரி, இந்தப் புராணப் பைத்தியம் போனபாடில்லே. நீங்கள் போய்ச் சாப்பாட்டை யும் மறந்துவிட்டு இத்தனே நேரம் இந்தப் பொய்க் கதை யைப் பொறுமையாகக் கேட்டீர்களே! அதையே சொல் லுங்கள்." என் நண்பர் புராணத்தைப்பற்றிய எதிர்ப். பிரசாரத்தை இதோடு கிறுத்தவில்லை. இன்னும் விரிவாகச் சொன்னர். நான் கேட்டுக்கொண்டே வந்தேன். எனக்கே பொறுமை போதவில்லை. "அது கிடக்கட்டும். உங்களுக்கு உண்மையான காரணம் தெரிந்திருக்குமென்றே தோன்றுகிறது. அதைச் சொல்லுங்கள். கேட்கிறேன்' என்று இடை மறித்துச் சொன்னேன். 'அப்படிக் கேளுங்கள். இந்த ஊருக்குப் பன மரத்துப்பாளையம் என்ற பெயர் அமைந்திருக்கிறதே; அந்தப் பேரே இது சரித்திரச் சிறப்புள்ள இடமென்று சொல்லவில்லையா? பாளையம் என்பது படை வீரர்கள் தங்கும் காம்ப். இங்கே ஒரு சமயத்தில் படை வீரர்கள் தங்கி யிருக்கிருர்கள்.” சரி, கதையை முழுவதும் சொல்லுங்கள்’ என்றேன். . கதையா? உண்மைச் சரித்திரமாக்கும்!" என்று அவர் திருத்தினர். . "சரி, அந்தச் சரித்திர வரலாற்றைச் சொல்லுங்கள்" என்று திருத்தத்துடன் என் வேண்டுகோளேச் சமர்ப்பித் தேன். அவர் தம் சரித்திர வரலாற்றை ஆரம்பித்தார். ★ அந்தக் குருக்கள் சொன்னதில் ஒன்று மாத்திரம் உண்மை. அதாவது இங்கே பனமரங்கள் அடர்ந்திருந்தன