பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகைக் கதை 111. என்பது வாஸ்தவம், குலோத்துங்க சோழன் காலத்தில் ஒரு பெரிய போர் நடைபெற்றது. அவனுக்கு எதிராகப் பல சிற்றரசர்கள் கூடிப் போர் செய்தார்கள். இங்கிருந்து நூறு மைல் தூரத்தில் உள்ள ஒர் ஊரில் கடுமையாகப் போர் கிகழ்ந்தது. எதிர்க் கட்சியில் ஏழு சிற்றரசர்கள் சேர்ந்திருந்தார்கள். சோழன் தனியாக அவர்களோடு போரிட்டான். முதலில் சிற்றரசர்களின் கட்சியே மேலோங்கி கின்றது. ஆனல் பல வகையான போர்த் தந்திரங்களில் வல்ல சோழ அரசன் முதலில் வளைந்து கொடுத்துப் பின்பு தாக்கினன். சிற்றரசர்கள் கை சளைத்தது. சிலர் போரில் வீழ்ந்தனர். வேறு சிலர் புற முதுகிட்டோடினர். அப்படி ஒடினவர்களேத் துரத்தி அடித்தான் சோழன். அந்த ஏழு பேர்களுள் ஒருவன் சில வீரர்களுடன் இந்தப் பக்கமாக ஓடிவந்தான். அடர்ந்த பனங்காடாக இருந்தமையாலும், ஜனங்கள் நடமாடாத இடமாக இருந்ததனலும் இங்கேயே மறைந்திருக்கலாம் என்று தீர்மானித்தான். அதற்கு நெடுங்காலத்துக்கு முன்பு இங்கே ஓர் ஊர் இருந்து பாழாயிற்று. கோயில் ஒன்றும் இருந்து இடிந்து போயிற்று. இங்கே வந்த சிற்றர்சன் பழைய சின்னங்களை யெல்லாம் பார்த்து இங்கேயே தங்கிவிடலாமென்று எண்ணினன். யாருக்கும் தெரியாமல் பல மாதங்கள் இங்கே வசிக்க முடியும் என்ற கம்பிக்கை அவனுக்கு உண்டாயிற்று. அந்தச் சிற்றரசன் சிவ பக்தன். பழுதான ஆலயத்தைப் பார்த்தவுடன், 'நமக்குத் துணே இந்த நாயகர் இருக்கிருர்" என்ற தைரியம் ஏற்பட்டது. ஆலயத்தை ஒருவாறு சுத்தம் செய்து பூசித்தான். வந்தவர்களும் இங்கே தங்கிவிட்டார் கள். அப்போது கார்த்திகைத் திருநாள் வந்தது. அரசன் அன்று கோயில் விளக்கேற்ற ஏற்பாடு செய்தான். சொக்கப் பனை கொளுத்தினல் அருகில் உள்ள பனங் காட்டில் நெருப்புப் பற்றிக்கொள்ளலாம். பற்றிக்கொண்