பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வளைச் செட்டி நான் குருக்களின் தல மகாத்மியத்தையும், வாத்தியா ரின் சரித்திர சிகழ்ச்சியையும் சொன்னேன்.

இந்த வாத்தியார் இருக்கிருரே, இவர் தாம் மாத் திரம் கெட்டிக்காரர், மற்றவர்களெல்லாம் முட்டாள் என்று எண்ணியிருக்கிருர், ஏதோ சிற்றரசன் என்று சொல்லுகிருரே; அவனுக்குப் பேர், ஊர் காலம் ஒன்றும் இல்லையா? சாசனச் சாட்சி ஏதாவது உண்டா? குருக்கள் ரிஷியென்றும் சாமியென்றும் ஒரு கட்டுக்கதையைச் சொன்னர். அதில் யாரும் ஏமாறமாட்டார்கள். இந்த மனிதர் ஏதோ தனியே ஆராய்ச்சி கடத்தினமாதிரி, குலோத் துங்க னென்றும் சண்டை யென்றும் சரித்திரத்தைப் போலச் சொல்கிருரே; அதுவும் கட்டுக்கதைதான். யாருக்கும் தெரியாமல் இங்கே வந்து பாளையம் இறங்கி அரசன் வாழ்ந்தா னென்ருல், அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் பசியா வரம் பெற்றவர்களோ? எவ்வளவு காளைக்கு அப்படித் தலைமறைவாக வாழ முடியும்?”

கிழவர் வாத்தியார்மேல் பாய்ந்தார். அதைக் கேட்டுக் கொண்டிருக்காமல் நான் என்ன செய்வது? பேசாமல் நடுநடுவே "ஹாம் கொடுத்துவந்தேன். ஒரு கட்டத்தில் அவரை இடைமறித்து, 'அப்படியால்ை கார்த்திகையில் சொக்கப் பனை கொளுத்தாததற்குக் காரணமே இல்லையா?" என்று கேட்டேன். "அப்படி யார் சொன்னர்கள்? காரணம் உண்டு. ஆனல் எது காரணம் என்பது, தெரிந்தவர்களுக்குத் தெரி யும்; எங்கள் தாத்தா சிறுபோதில் எனக்குச் சொல்லி யிருக்கிரு.ர்.' 'அதைச் சொல்லுங்கள், கேட்கிறேன்" என்றேன். கிழவர் தம் கதையை ஆரம்பித்தார்.