பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகைக் கதை 115 4 அந்தக் காலத்தில் பனமரத்துப் பாளைய ஜமீன்தார் குட்டப்ப நாயக்கர் என்ருல் அழுத பிள்ளே வாய் மூடும்; அவர் பண்தை அட்டகாசம் இல்லை. அதோ அடுத்த தெருவில்தான் அவருக்கு வீடு. கடவுளுக்குப் பயந்து வாழ்ந்த காலம் அது. இந்தக் கோயில் சின்னதாக இருந்தாலும் கிராமத்து ஜனங்களின் கட்டுப்பாட்டால் உற்சவம் ஒன்றும் குறைவில்லாமல் கடந்துவரும் ஊரில் பெரியதனக்காரர்கள் தங்கள் வீட்டில் எது நடக் கிறதோ, கடக்கவில்லையோ, கோயிலில் எந்த விசேஷ மும் கின்றுவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அந்தப் பெரியதனக்காரர்களில் என்னுடைய பாட்டனரும் ஒருவர். ஜமீன்தார் குட்டப்ப நாயக்கர் விஷயத்தில் எல்லோ ருக்குமே மனத்தாங்கல் உண்டு. ஊருக்கு ராஜாவாயிருக் கிறவர் ஒழுங்காக இருந்தால் அவருக்கும் நல்லது ஊருக் கும் எவ்வளவோ நல்லது. ஆனல் அவருக்குச் சொல்கிறவர் யார்? அவர்கடக் கோயில் திட்டங்களில் ஒன்றையும் குறைப்பதில்லை. உள்ளுர்ப் பெரியதனக்காரர்களில் ஒன்று இரண்டு பேர் ஜமீன்தாருக்கு இச்சகம் பேசுகிறவர்கள். அப்படி இரண்டு பேர் இருந்ததனுல்தான் நல்ல புத்தி நாயக்கரிடம் போய் அடையப் பயப்பட்டது. - இந்த ஊரில் அநேகமாக ஒட்டுவில்லே வீடுகளே அதிகம், ஏழைகள் கூரை வீடுகள் கட்டிக்கொண்டு வாழ்க் தார்கள். தார்சு வீடுகள் ஒன்று இரண்டே இருந்தன. அந்த வீடுகளிலும் மேல் மாடி இராது. கடவுளுடைய கோயிலுக்கு மேலே உயரமாக வீடு கட்டக்கூடாதென்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் சொல்லுவார்கள்.