பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 வளைச் செட்டி மேல்மாடி வேண்டுமானல், கோயிலில் ஏழு கிலேக் கோபுரம் முதலில் கட்டிவைத்துவிட்டுப் பிறகு மாடி கட்டலாம். அது கடக்கிற காரியமா? மேல் மாடி வேண்டு மென்று அவ்வளவு கட்டாயம் அந்த நாளில் யாருக்கும் இல்லை. ஆனல் ஜமீன்தார் குட்டப்ப நாயக்கருக்கு அந்த அவசியம் ஏற்பட்டது. தம்முடைய சுகபோகங்களுக்கு மெத்தை வீடு இன்றியமையாத அங்கம் என்ற புத்தி அவருக்கு உதயமாயிற்று. சிநேகிதர்களிடம் சொன்னர். மனிதனுக்குப் பயப்படாவிட்டாலும் தெய்வத்துக்குப் பயப்படும் பேர்வழிகள் மெத்தை கட்டக்கூடாது என்ருர்கள். ஜமீன்தாரோ பிடிவாதமாக இருந்தார். கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்தார். கெட்டிக் கட் டடம் கட்டாமல் கூரைக் கொட்டகை ஒன்று அமைப்பு தாகத் திட்டமிட்டார். தஞ்சாவூர்ப் பக்கத்திலிருந்து ஒரு வனேக் கூப்பிட்டுக்கொண்டு வந்து மிகவும் அருமையான கொட்டகை ஒன்றை அமைத்துக் கொண்டார். அது கூரைக் கொட்டகையா? அழகான அலங்கார மண்டபம்! என்ன வேலைப்பாடு என்ன செலவு! அந்தக் கொட்டகை யைப் பார்ப்பதற்காகவே வெளியூரிலிருந்து பலர் வந்து போவார்கள். பங்குனி மாசம் கொட்டகை முடிந்தது. சித்திரை, வைகாசி, ஐப்பசி வரையில் அதில் உல்லாசமாகப் போது போக்கினர் ஜமீன்தார். கார்த்திகை மாசம் பிறந்தது. அந்த வருஷம் மாச முதலிலேயே கார்த்திகை வந்தது. அப்போதெல்லாம் உற். சவங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும் என்று சொன்னேனல்லவா! கார்த்திகை உற்சவம் அமர்க்களமாக நடைபெற்றது. எல்லா ஊர்களிலும் கடப்பதுபோல இங்கும் சொக்கப் பனே கொளுத்துவதுண்டு. அந்த வருஷம்