பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திக்ைக் கதை 117 மிகப்பெரிய கூம்புகட்டி வைத்தார்கள். அந்த ஜமீன் தாரின் போதாத காலம் பாருங்கள்; அவரே அதில் சிரத்தை எடுத்துக் கொண்டார். சொக்கப் பனைக்குத் தீ வைத்தார்கள். அன்றைக்கு என்று என்றும் இல்லாதபடி ஒரு சுழல் காற்று அடித்தது. சொக்கப் பனையி லிருந்து ஒரு பொறி பறந்துபோய் ஜமீன்தார் வீட்டுக் கொட்டகை யில் பட்டது. பாவி பண்ணின காரியத்தை என்ன வென்று சொல்கிறது எதோ கல்யாணத்துக்காக ஜவுளி யெல்லாம் வாங்கி மேல் கொட்டகையில் வைத்திருந்தார். இரண் டாவது சொக்கப் பனே ஜமீன்தார் வீட்டில் கொழுந்து விட்டு எரிந்தது. ஊர் முழுவதும் கூடி அணைத்தார்கள். கீழே இருந்தாலும் அணைத்து விடலாம்; மேல் மெத்தைக்கு ஜலத்தை எப்படிக் கொண்டு போகிறது. தி மற்ற இடங் களுக்குப் பரவாமல் தடுப்பது பிரம்மப் பிரயத்தனமாகி விட்டது. - "ஜமீன்தாருக்கு இவ்வளவும் வேண்டும்' என்று ஊர் ஜனங்கள் சொன்னர்கள். ஆல்ை குட்ட்ப்ப நாயக்க ருக்குப் புத்தி வந்ததாகத் தெரியவில்லை. 'இனிமேல் கார்த்திகைக்குக் கோயிலில் சொக்கப் பனை கொளுத்தக் கூடாது' என்று உத்தரவு போட்டு விட்டார். அவர் ஆக்ஞையை மீற இங்கே மனிதர் இல்லை. அது முதல் இந்த ஊரில் வெறும் விளக்கு வைப்பதோடு கார்த்திகை உற்சவம் கடக்கிறது. ★ "எல்லாவற்றையும் நீங்கள் நேரில் கண்டது போலச் சொல்கிறீர்களே!” என்று கேட்டேன். "எங்கள் தாத்தா இப்படியே சொல்வார்; இன்னும் விரிவாகச் சொல்வரர்; அவர் சொல்வதைக் கேட்டுத்தான் சொல்கிறேன்” என்ருர் அவர்.