பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 - வனைச் செட்டி 'இப்போது ஜமீன்தார் பரம்பரையில் யார் இருக் கிருர்கள்?" - "அதெல்லாம் பூண்டற்றுப் போய் விட்டது. அந்தக் குட்டப்ப நாயக்கர் பிள்ளே இந்த ஊரை விட்டே போய் விட்டான். சேலத்தில் வீடு கட்டிக்கொண்டு வாழ்ந்தான். அவனுக்கு அவன் தகப்பனர் விட்டுப்போன சொத்துக் கொஞ்சந்தான். அதையும் அவன் அழித்து விட்டான்." 'இப்போது குட்டப்ப நாயக்கரை எல்லோரும் மறந்து விட்டார்களே!' என்றேன். 'ஏன்? எப்படி உங்களுக்குத் தெரிந்தது?" என்று கேட்டார் கிழவர்.

இந்தக் கதையை மற்றவர்கள் சொல்லவில்லையே' என்று காரணம் கூறினேன்.

'என்னைப் போல வயசானவர்களுக்குத் தெரிந்திருக் கலாம்” என்று கூறி விடைபெற்றுக் கொண்டார் அந்தப் பெரியார்.